சினிமாவில் பல்வேறு நட்சத்திர தம்பதிகள் திருமணம் செய்து கொண்டு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள், அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா பிரசன்னா-சினேகா, கிருஷ்-சங்கீதா போன்ற பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பாபி சிம்மா மற்றும் ரேஷ்மி ஜோடிகளும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர தம்பதிகள் ஆவார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் நடிகர் பாபி சிம்ஹா.
பாபி சிம்ஹா, ஹீரோ வில்லன் என பல வேடங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.2012 இல் வெளியான காதலில் சுதப்புவது எப்படி என்ற படத்தில் அறிமுகமான இவர்.அதன் பின்னர் பீஸா,சூது கவ்வும் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் ஜிகிர்தண்டா படத்தில் தனது வயதிற்குமீறிய நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவருக்கு 2014 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.
இவர் திருமணம் செய்து கொண்ட ரேஷ்மியும் தமிழ் சினிமாவில் பலரும் அறியப்பட்ட ஒரு நடிகை தான். சமீபத்தில் நடிகை ரேஸ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பணத்தை ஏமார்ந்து விஷயம் குறித்து கூறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் accessories_for_her_ என்ற பக்கத்தில் பொருளை ஒன்றை ஆர்டர் செய்து பணம் அனுப்பியதாகவும் ஆனால், 2 மாதங்களாக தனக்கு பொருளும் வரவில்லை அவர்களிடம் இருந்து பதிலும் வரவில்லை. இதுபோன்ற பக்கத்தை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று கூறியுள்ளார்.
நடிகை ரேஷ்மி மேனன், 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உறுமி’ படத்தில் பாபி சிம்மாவுடன் நடித்தார் ரேஷ்மி. அந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின்னர் 2016 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்திகொண்டனர். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.