இன்று 55 வது பிறந்தநாளை கொண்டாடும் ரேவதி – முதல் படத்தின் செட்டில் கொண்டாடிய முதல் பிறந்தநாள். இயக்குனர் பகிர்ந்த அறிய புகைப்படம்.

0
3176
revathi
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. இவருடைய உண்மையான பெயர் ஆஷா. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். நடிகை ரேவதி அவர்கள் 1981 ஆம் ஆண்டு “மண்வாசனை” என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதிலிருந்து வரை மண்வாசனை ரேவதி என்று தான் நிறைய பேர் அழைப்பார்கள். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரேவதி அவர்கள் ஹிந்தி, ஆங்கில திரைப் படங்களை கூட இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-

இன்று ரேவதி தனது 55வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் ரேவதி நடித்த முதல் படமான ‘மண்வாசனை’ படத்தின் போது நடிகையான பின்னர் ரேவதி கொண்டாடிய முதல் பிறந்தநாளின் புகைப்படம் ஒன்றை இயக்குனரும் நடிகருமான சித்ரா லக்ஷ்மணன் பகிர்ந்து உள்ளார். நடிகை ரேவதி அவர்கள் 1988 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் ரேவதி அவர்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

- Advertisement -

மேலும், 27 ஆண்டு காலமாக இவர்களுடைய வாழ்க்கையில் குழந்தை எதுவும் இல்லாததனால் தான் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இவர்கள் இருவரும் 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.சுரேஷ் மேனன் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ரேவதியை விவாகரத்து செய்த பின்னர் நடிகர் சுரேஷ் மேனன் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.

1

அதே போல நடிகை ரேவதியும் தனியாக வாழ்ந்து வந்தார். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையால் ரேவதியின் திரை வாழ்க்கை பெரிதும் பாதித்தது. இருப்பினும் தனது செகண்ட் இன்னிங்ஸ்சை தொடர்ந்த ரேவதி படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது மணிரத்னம் தயாரிக்க இருக்கும் நவரசா என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார் ரேவதி. அதே போல இறுதியாக இவர் நடித்த அழகு சீரியல் கூட மாபெரும் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-
Advertisement