கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற ரேவதி. குழப்பத்திற்கு கிடைத்த பதில்.

0
264774
Revathi
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 80, 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. இவருடைய உண்மையான பெயர் ஆஷா. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். நடிகை ரேவதி அவர்கள் 1981 ஆம் ஆண்டு “மண்வாசனை” என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதிலிருந்து வரை மண்வாசனை ரேவதி என்று தான் நிறைய பேர் அழைப்பார்கள். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரேவதி அவர்கள் ஹிந்தி, ஆங்கில திரைப் படங்களை கூட இயக்கி உள்ளார். நடிகை ரேவதி அவர்கள் 1988 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில காலம் ரேவதி அவர்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். மேலும், 27 ஆண்டு காலமாக இவர்களுடைய வாழ்க்கையில் குழந்தை எதுவும் இல்லாததனால் தான் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று உள்ளார்கள் என்றும் கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

பின் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இவர்கள் இருவரும் 2002 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் நடிகை ரேவதி அவர்களுக்கு தற்போது 5 வயதில் ஒரு மகள் உள்ளார் என்ற தகவல் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. மேலும் இது அவருடைய உண்மையான குழந்தையா? இல்லை தத்தெடுத்து வழங்கப்பட்ட குழந்தையா? என பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகின்றன. இதை முறியடிக்கும் வகையில் நடிகை ரேவதி அவர்கள் இதற்கான விளக்கத்தை அளித்து உள்ளார். அவர் கூறியது, என் கல்யாண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு மனதளவில் நொறுங்கி போய் இருந்தேன். பின் என்னுடைய திருமண வாழ்க்கையும் முடிந்து விட்டது. நாங்கள் இருவரும் தனித் தனியாக தான் வாழ்ந்து வருகிறோம்.

இதையும் பாருங்க : சூப்பர் சிங்கர் ஜெசிகாவா இது. என்ன இப்படி அடையாளம் தெரியாம மாறிட்டாங்க.

- Advertisement -

தற்போது அனைவரும் முன்னாடியும் தனக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். அவளுடைய பெயர் மகி. மேலும், நான் அவளை தத்து எடுத்து வளர்க்கவில்லை. நான் பெற்றெடுத்த மகள். இவளுக்கு இப்போது 5 வயது ஆகிறது. ஒரு பெண் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள். அதற்காக நான் பல வருடங்களாக ஏங்கி இருக்கிறேன். அதோடு நான் டெஸ்ட் டியூப் வழியாக தான் கருவுற்றேன். பின் நான் பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். ஆனால், அனைவரும் இவளை நான் தத்து எடுத்து பிள்ளை என தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நான் பெற்றெடுத்த குழந்தை அவள்.

மேலும், அவள் தான் என் உலகம், சந்தோஷம் எல்லாமே. அதோடு இதை பற்றி நான் யாரிடமும் இதுவரை பேசியதில்லை. தற்போது அனைவருக்கும் தெரிய வேண்டும் என தான் இதை வெளிப்படுத்துகிறேன் என்று கூறினார். தற்போது நடிகை ரேவதி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்து துறைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதோடு ரேவதி அவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் “அழகு” என்ற சீரியலில் அழகம்மை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement