அஜித் எனக்கு சின்ன பையன் ! பிரபல நடிகை அதிரடி பேச்சு !

0
1946
Actress Revathi

நடிகர் அஜித் இப்போது வேண்டுமானல் சால்ட் அண்ட் பேப்பர் ஹர்ஸ்டைலை வைத்துக்கொண்டு சற்று கரடுமுரடான மாஸ் லுக்கில் இருந்தாலும்.ஓரு காலகட்டத்தில் இவர் தான் பல பெண்களுக்கு கனவு கண்ணனாக இருந்து வந்தவர்.இன்றளவும் பெண் நடிகைகள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் அஜித், அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான காலகாட்டத்தில் அதிகப்படியான பெண் ரசிகர்களால் விரும்பப்பட்டர். இந்த கால நடிகைகள் பெரும்பாலானோர் உங்களுக்கு எந்த நடிகருடம் நடிக்க ஆசை என்று கேட்டால் அஜித்தை தான் முதலில் சொல்வார்கள்.

Revathi

இந்நிலையில் நடிகர் அஜித்துடன் புதிய முகம்,ரெட் போன்ற படங்களில் நடித்த தனது அனுபவித்தை தெரிவித்த பிரபல தமிழ் நடிகை ரேவதி.அவர் பேசிய வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்கலிள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோ பதிவில் அவர் பேசிய போது புதிய முகம் பட காலத்தில் எனக்கு அஜித்தை நன்றாக தெரியும், அவரை நான் சின்ன பையனாக பார்த்திருக்கிறேன் .என் வீட்டிற்கெள்ளாம் அஜித் வருவார் ஆனால் ரெட் படத்தில் நான் பார்த்தபோதெல்லாம் அவர் மிகப்பெரிய ஸ்டார் ஆகிவிட்டார். ஆனால் என்னை பொறுத்த வரை அஜித் இன்னும் சின்னப்பையன் தான், குட் பாய். இன்றைக்கு அவர் சினிமாவில் இப்படி ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால் அது அவர் எடுக்கும் தெளிவான முடிவுகளின் மூலம் தான் என கூறியுள்ளார்.