எம் எல் ஏ- ஆனாலும் இளம் நடிகைகளுக்கு இணையாக ஒர்க் செய்து அசத்தும் ரோஜா – வைரலாகும் வீடியோ.

0
964
Roja

நாட்டையே உலுக்க வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்து. இந்த ஊரடங்கு உத்தரவினால் வீட்டிற்குள்ளயே முடங்கி இருக்கும் பிரபலங்கள் யோகா சனம் செய்வது, உடற்பயிற்சி செய்வது என்று வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த லிஸ்டில் தற்போது 90ஸ் நடிகை ரோஜாவும் இணைந்துள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

இவர் 1992 ஆம் ஆண்டு வெளி வந்த “செம்பருத்தி” படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகம் ஆனவர். அதன்பின்னர் சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி, என் ஆசை ராசாவே, ஊட்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆன ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள்.

- Advertisement -

படங்களில் வாய்ப்பு குறைந்த்தால் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், நடுவராகவும் பங்குபெற்று வந்தார். அதுபோக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.நடிகை ரோஜா அவர்கள் தற்போது நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகிறார். நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்து தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

கொரோனா சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு நடிகை ரோஜா பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் தனது பகுதியில் தானே இறங்கி கிருமி நாசினியை தெளித்து அசத்தி இருந்தார் ரோஜா. இந்த நிலையில் இளம் நடிகைகளை போல தானும் ஒர்க் அவுட் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் இன்னும் ஒரு பிட்னஸ் நடிகை தான் என்பதை உணர்த்தியுள்ளார் ரோஜா.

-விளம்பரம்-
Advertisement