ஒரு அமைச்சராக இருந்துகொண்டு இப்படி செய்யலாமா? புத்தாண்டு கொண்டாடத்தால் சர்ச்சையில் சிக்கிய ரோஜா

0
672
Roja
- Advertisement -

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அமைச்சர் ரோஜா செய்திருக்கும் செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. உலகமே வருடம் வருடம் ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு திருவிழா போலவே நடைபெறுகிறது என்று சொல்லலாம். கேக் வெட்டி, பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடி வருகிறார்கள். இதை சாதாரண மக்கள் துவங்கி பிரபலங்கள் வரை என பலருமே ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் நடிகையும், அமைச்சருமான ரோஜா அவர்கள் புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார். தற்போது இதுதான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, டிஸ்கோ கிளப் ஒன்றில் அமைச்சர் ரோஜா அவர்கள் உற்சாகத்தில் நடனமாடி புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும், ஒரு அமைச்சரும், மக்கள் மத்தியில் மதிக்கத்தக்கவர் இப்படி ஆட்டம் போடுவதா? அவர்களுடைய பதவிக்கு கூட மரியாதை கொடுக்க வேண்டாமா? என்று கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

ரோஜா திரைப்பயணம்:

இதற்கு ரோஜா தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு குச்சி பிடி நடன கலைஞராக தான் இருந்தார். பின் 1991 ஆம் ஆண்டு பிரேம தப்பாஸு என்ற தெலுங்கு ஆண்டு மூலம் தான் இவர் நடிகையானார். அதற்கு பின் தான் இவர் தமிழில் செம்பருத்தி படத்தில் நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், பிரபு, சரத்குமார் என்று பல நடிகர்களின் படங்களிலும் ரோஜா நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணசித்திர வேடங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

ரோஜா அரசியல்:

பின் சில ஆண்டு காலாகவே ரோஜா அவர்கள் சினிமாவை விட்டு விலகி அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு. ரோஜா அந்த பகுதி மக்களின் கல்வி,மருத்துவ உதவி என பல விஷயங்களை செய்து அசத்தி இருக்கிறார்.

ரோஜாவின் செயல்கள் :

தற்போது ரோஜா அவர்கள் ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார். என்னதான் ரோஜா மீது பல விமர்சங்கள் எழுந்தாலும் தனது தொகுதிக்கு அடிக்கடி விசிட் அடித்து மக்கள் குறைகளை கேட்டறிந்து அதனை சரி செய்து வருகிறார் ரோஜா. சமீபத்தில் கூட கிறிஸ்த்துமஸ் தினத்தன்று கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஏழைகளுக்கு பரிசு பொருட்களை அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement