அச்சு அசலாக சிறு வயது ரோஜா போலவே இருக்கும் அவரது மகள் – இதோ புகைப்படம்.

0
2190
Actress Roja

சினிமா திரை உலகில் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் திரை உலகில் பிரபலமான இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமா திரையுலகிலும் இப்படி ஒரு தம்பதிகளா! என்று வியப்பூட்டும் வகையில் இவர்களுடைய திருமணம் நடந்தது. ரோஜா அவர்கள் ஜாதி, மதம், இனம் எல்லாத்தையும் தாண்டி தான் காதலித்தவரையே கரம் பிடிக்க 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டார்.

This image has an empty alt attribute; its file name is image-17.png

இந்த மாதிரி காதல்கள் எல்லாம் கதைகளிலும், படங்களிலும் தான் பார்த்திருப்போம். உண்மையான ரியல் லைப்பில் பார்ப்பதற்கே ரொம்ப அபூர்வமான விஷயம் என்றும் கூறுகிறார்கள். மேலும், இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்திற்காக தான் இத்தனை வருடம் காத்து இருந்தார்கள் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. நடிகை ரோஜா அவர்கள் தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இதையும் பாருங்க : போராடி தோற்ற கமல் – தோல்விக்கு பின்னர் போட்ட முதல் உருக்கமான பதிவு.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது காதல் குறித்து பேசிய ரோஜா, ஒருமுறை நான் ராஜமுந்திரி படப்பிடிப்பில் இருந்தேன். அன்றைக்கு என்னுடைய பிறந்த நாளும் கூட. ஆனால், செல்வா அங்கே வந்து திடீரென்று என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருக்கிறதா! என்று கூறினார்.எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. நீ இப்போது ரொம்ப பிஸியான ஆர்டிஸ்ட் தான். உன் ஆசை தீரும் வரை படங்களில் நடி. எப்போது உனக்குப் படத்தில் நடிப்பது போதும் என்று தோன்றுகிறதோ, அப்போது சொல் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பேசினார்.

அவருடைய அந்த நேர்மையான பேச்சு எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. நானும் சம்மதம் தெரிவித்தேன். செல்வா எனக்காக 13 வருடம் காத்திருந்து இருந்தார்.எனக்காக 13 வருடம் காத்திருந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் என்னை திருமணம் செய்துகொண்டார் செல்வா என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் ரோஜா தனது மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்து  ரோஜாவின் மகள் அவரைப் போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement