போராடி தோற்ற கமல் – தோல்விக்கு பின்னர் போட்ட முதல் உருக்கமான பதிவு.

0
2706
kamal
- Advertisement -

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவிற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று பரபரப்பாக நடைபெற்றுது. இதில் பெரும்பான்மையை நிரூபித்து முதன் முறையாக முதலமைச்சர் பதிவியை கைப்பற்றி இருக்கிறார் மு க ஸ்டாலின். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டனர்.

-விளம்பரம்-

கொரோனா பிரச்சனை காரணமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி நேற்று (மே 2) தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை படு மும்மரமாக நடைபெற்றுது. கோவை தெற்கில்திமுக கூட்டணியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் சார்பில், மயூரா எஸ்.ஜெயக்குமாரும், அதிமுக இணைந்த பாஜக சார்பில் வானதி சீனிவாசனும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், அதன் தலைவர் கமல்ஹாசனும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்துல் வகாப்பும், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த தொகுதியில் ஆரம்பத்தில் ஒரு சில சுற்றில் முன்னணியில் இருந்து வந்தார் கமல். இவருக்கும் வானதி சீனிவாசனுக்கு இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில் யார் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் வானதி ஸ்ரீநிவாசன், 1500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கமல் தோற்றாலும், தனது முதல் தேர்தலிலேயே இப்படி டப் கொடுத்தது பலராலும் பாராட்டி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தனது தோல்விக்கு பின் கமல் ட்வீட் ஒன்றை செய்திருந்தார்.

அதில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement