ப்பா, இது வீடா மண்டபமா ? பல வசதிகளுடன் ரோஜா கட்டி இருக்கும் பிரம்மாண்ட வீடடின் Home Tour வீடியோ.

0
683
roja
- Advertisement -

க பிரம்மாண்டமாக நடிகை ரோஜா கட்டியிருக்கும் புது வீட்டின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1992 ஆம் ஆண்டு வெளி வந்து இருந்த “செம்பருத்தி” படத்தின் மூலம் தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதனை தொடர்ந்து இவர் சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, அசுரன் மக்கள், ஆட்சி ராஜாலி, அடிமை சங்கிலி,

-விளம்பரம்-

என் ஆசை ராசாவே, ஊட்டி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். மேலும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்த ரஜினி, விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார், பிரபு என்று பல நடிகர்களின் படங்களிலும் ரோஜா நடித்து இருந்தார். அதே போல இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து இருந்தார். இளம் வயதிலேயே ரோஜா படு கிளாமராகவும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோஜா திரைப்பயணம்:

பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணசித்திர வேடங்களில் நடித்து இருந்தார். பின் சில ஆண்டு காலாகவே ரோஜா அவர்கள் நடிப்பதை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வந்தார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார். அதோடு ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதில் ரோஜாவுக்கு பங்கு உண்டு.

ரோஜா அரசியல்:

அதோடு சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் எம்எல்ஏவாக இருக்கும் ரோஜாவுக்கு ஜெகன்மோகன் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாதி வாரியாக அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ரோஜாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தற்போது ரோஜா அவர்கள் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக மட்டும் செயல்பட்டு வருகிறார். இருந்தும் ரோஜா அப்பகுதியில் பம்பரமாக சுற்றி பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-

கொரோனா சமயத்தில் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு எம் எல் வாக பல உதவிகளை செய்து இருந்தார் ரோஜா. அதுமட்டும் இல்லாமல் ஊரடங்கின் போது கூட தனது பகுதியில் தானே இறங்கி கிருமி நாசினியை தெளித்து அசத்தி இருந்தார் ரோஜா. அந்த பகுதி மக்களின் கல்வி,மருத்துவ உதவி என பல விஷயங்களை செய்து அசத்தி இருக்கிறார் ரோஜா. இதனிடையே இவர் கடந்த 2002 ஆம் தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆன ஆர்.கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள்.

ரோஜா கட்டி இருக்கும் புது வீடு:

இந்நிலையில் ரோஜா புது வீடு கட்டி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ரோஜா நகரி பகுதி அமைச்சராக இருப்பதால் அங்கேயே இருந்து மக்களின் கோரிக்கையை கேட்க வேண்டும் என்பதற்காக அங்கே புதிய வீடொன்று கட்டி இருக்கிறார். மிக பிரம்மாண்ட அளவில் ரோஜா கட்டியிருக்கும் வீட்டின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement