சாதி பிரச்சனை. 13 வருடம் காத்திருந்து திருமணம். ரோஜாவின் காதல் கதை தெரியுமா ?

0
26335
roja
- Advertisement -

சினிமா திரை உலகில் 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை ரோஜா. இவர் திரை உலகில் பிரபலமான இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமா திரையுலகிலும் இப்படி ஒரு தம்பதிகளா! என்று வியப்பூட்டும் வகையில் இவர்களுடைய திருமணம் நடந்தது. ரோஜா அவர்கள் ஜாதி, மதம், இனம் எல்லாத்தையும் தாண்டி தான் காதலித்தவரையே கரம் பிடிக்க 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டார். இந்த மாதிரி காதல்கள் எல்லாம் கதைகளிலும், படங்களிலும் தான் பார்த்திருப்போம். உண்மையான ரியல் லைப்பில் பார்ப்பதற்கே ரொம்ப அபூர்வமான விஷயம் என்றும் கூறுகிறார்கள். மேலும், இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்திற்காக தான் இத்தனை வருடம் காத்து இருந்தார்கள் என்ற தகவலும் தெரியவந்துள்ளது. நடிகை ரோஜா அவர்கள் தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

-விளம்பரம்-
Image result for roja marriage photos"

ரோஜா அவர்கள் பூர்விகம் ஹைதராபாத் அதாவது ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இயக்குனர் செல்வமணி தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்டவர். மேலும் ,ரோஜா அவர்கள் சினிமா துறையில் பிரபலமாக தொடங்கியவுடன் அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. இந்நிலையில் இயக்குனர் செல்வமணி படங்களை இயக்குவதில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியது. இதனால், சினிமா துறையில் மார்க்கெட்டை இழந்து நின்றார் இயக்குனர் செல்வமணி. மேலும், இப்படி சினிமா துறையில் வாய்ப்பில்லாத இயக்குனரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? என ரோஜாவின் மனதை பல பேர் குழப்பியும், வேண்டாம் என்று வற்புறுத்தியும் வந்தார்கள். ஆனால், ரோஜா தனது காதல் மீதும், செல்வமணியின் மீதும் உறுதியான நம்பிக்கையை வைத்து இருந்தார்.

இதையும் பாருங்க : சுஜித்தின் மறைவில் கூட விளம்பரம் தேடும் மீரா. விடியோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

- Advertisement -

மேலும், அவர்களுடைய காதல் அனுபவங்களை பற்றி ரோஜா இடம் கேட்டபோது அவர் கூறியது, நான் தெலுங்கு, தமிழில் என பல இயக்குனர்களுடன் படங்களில் பணியாற்றினாலும் செல்வாவிடம் பணியாற்றிய அந்த அனுபவம் எனக்கு கிடைக்காது. ஏனென்றால், செல்வாவின் நற்பண்புகளால் நான் மிகவும் கவரப்பட்டேன். அதுமட்டுமில்லாமல் என்னைப் பற்றி எனது அம்மாவிடமும், அண்ணனிடமும் அக்கறையுடனும், மிகக் பொறுப்புணர்வோடு பேசி வந்திருப்பார் செல்வமணி. இதனால் என் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் செல்வமணியை ரொம்ப பிடிக்க ஆரம்பித்துவிட்டது. மேலும், ‘அம்மாவுக்கு செல்வானா உயிரென்று’ நானே கூறுமளவிற்கு எனது தாயாரிடம் நல்ல பெயரை வாங்கினார் செல்வமணி. எங்களுடைய காதலை செல்வமணி மிக அழகாக என் அம்மாவிடம் கூறினார். அவர் என்னிடம் எப்போதுமே போலவே தான் பழகி வந்தார். ஆனால், என் அம்மாவிடம் என் மீதான தனிப்பட்ட அக்கறையும் ,பாசத்தையும் அடிக்கடி வெளிப்படுத்தி வந்தார்.

-விளம்பரம்-
Image result for roja marriage photos"

அதனால் செல்வமணி என் மீது வைத்த அக்கறையை பாசத்தையும் எல்லாம் தாண்டி பிரியம் உள்ளது என்பது அம்மாவுக்கு தெரிந்தது. பின் என் அம்மா நம் மகளுக்கு ஏற்றவர் இவர்தான் என முடிவு செய்து என் அண்ணனிடம் கேட்டார். என் அண்ணனும் எந்த ஒரு விருப்பு வெறுப்பும் இன்றி செய் செல்வாவுடன் என் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்கள். நாங்கள் ரெட்டி வம்சத்தினை சார்ந்தவர்கள். எங்கள் ஜாதியில் வேற ஒரு ஜாதி பெண்ணையும், மாப்பிள்ளையையும் பெரும்பாலும் எடுக்கமாட்டார்கள்,அதோடு திருமணம் செய்ய மாட்டார்கள். செல்வமணி முதலியார் வகுப்பு ஜாதியை சேர்ந்தவர். மேலும், அவருடைய நல்ல குணத்தாலும் அக்கறையாலும், நேர்மையான கொள்கையாலும் ஜாதிகளை எல்லாம் மீறி எங்களை கவர்ந்துவிட்டார் செல்வா. பின் ஒருமுறை நான் ராஜமுந்திரி படப்பிடிப்பில் இருந்தேன். அன்றைக்கு என்னுடைய பிறந்த நாளும் கூட. ஆனால், செல்வா அங்கே வந்து திடீரென்று என்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இருக்கிறதா! என்று கூறினார்.

எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. நீ இப்போது ரொம்ப பிஸியான ஆர்டிஸ்ட் தான். உன் ஆசை தீரும் வரை படங்களில் நடி. எப்போது உனக்குப் படத்தில் நடிப்பது போதும் என்று தோன்றுகிறதோ, அப்போது சொல் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பேசினார். அவருடைய அந்த நேர்மையான பேச்சு எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. நானும் சம்மதம் தெரிவித்தேன். செல்வா எனக்காக 13 வருடம் காத்திருந்து இருந்தார். நிஜமாகவே இப்படி ஒரு கணவர் கிடைக்க நான் மிகவும் கொடுத்திருக்க வேண்டும். எனக்காக 13 வருடம் காத்திருந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் என்னை திருமணம் செய்துகொண்டார் செல்வா. செல்வா என் வாழ்வில் கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என ரோஜா பெருமையுடன் கூறினார். மேலும், ரோஜா– செல்வமணி செல்வமணி ஆகிய தம்பதியருக்கு இரண்டு அழகான குழந்தைகள் உள்ளனர்.

Advertisement