பிரபல நடிகை சாய் பல்லவி தனது தனிப்பட்ட விஷயங்களை பேட்டியில் பேசியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் இளைஞர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என கலக்கி கொண்டிருக்கிறார். சாய் பல்லவி தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார்.
மேலும், அமரன் படம் வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் நிலையில் தற்போது படத்தின் பிரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி அமரன் திரைப்படம் மற்றும் தனது திரைப்பயணம் குறித்து பேட்டியில் பேசியுள்ளார். அதில், ‘கார்கி’ படம் முடித்த பிறகு, எனக்கு சமூகப் பிரச்சினைகள் வைத்து நிறைய படங்கள் வந்தது. நான் அப்போ ஒரே மாதிரியான படங்கள் பண்ண வேண்டாம் என்று நினைத்தேன். ஆனா, ஒரு ஸ்ட்ராங்கான கேரக்டர் பண்ண வேண்டும் என்று நினைத்தேன்.
அமரன் குறித்து:
அப்போதான் ராஜ்குமார் சார் ‘அமரன்’ ஸ்கிரிப்ட் என்கிட்ட கொண்டு வந்தாரு. எனக்கு அவரை நீண்ட காலமாக தெரியும். அப்போ நான் அவர்கிட்ட என்ன இவ்ளோ சிம்பிளான ரோல் கொண்டு வந்து என்கிட்ட கொடுக்குறீங்க என்று கேட்டேன். அப்போ அவரு நீங்க ஃபர்ஸ்ட் முகுந்தனோட மனைவியை மீட் பண்ணுங்க, அதுக்கப்புறம் இந்த ஸ்கிரிப்ட்டை படிங்க என்று சொன்னார். அப்போ நான் அவங்களை மீட் பண்ண பிறகு அவங்களோட கிரேஸ், பலம் எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது. அதுக்கப்புறம் தான் இந்த படத்திற்கு ஓகே சொன்னேன்.
திரைப்பயணம் குறித்து:
அப்போ தான் ராஜ்குமார் சார், முகுந்தன் கேரக்டருக்கு எவ்வளவு முக்கியதுவம் இருக்கிறதோ அந்த அளவுக்கு இந்து கேரக்டருக்கும் இருக்கும் என்று சொன்னார். நான் சோசியல் மீடியா இல்லாத காலத்தில் சினிமாவில் நுழைந்தேன். அப்ப எல்லாம் நம்ம ஏதாவது பண்ணா அது டிவில மட்டும் தான் வரும். ‘பிரேமம்’ முடிச்சுட்டு பேஸ்புக் எல்லாம் ஓபன் பண்ணி பார்த்தா என்னோட போட்டோவை டிஸ்ப்ளே பிக்சர் வச்சிருந்தாங்க. அப்போ அதெல்லாம் எனக்கு புதுசாக இருந்தது. முதலில் நான் அழகா இல்லையோ என்கிற மாதிரி நான் பீல் பண்ணி இருக்கிறேன். ஆனால், பிரேமம் படம் வந்த பிறகு எல்லாரும் மலர் கேரக்டரை ஏத்துக்கிட்டதுக்கு பிறகுதான் கேரக்டர் அழகா இருந்ததுன்னா போதும். அதுதான் அழகு என்று புரிந்து கொண்டேன்.
கிளாமராக நடிப்பது குறித்து:
நான் சினிமாவில் துணிகளை இப்படி தான் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு வரவில்லை. ஆனால், பிரேமம் படத்திற்குப் பிறகு ஒரு முறை என்னுடைய டான்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. அந்த டான்ஸ்க்கு ஏற்ற உடைதான் நான் அணிந்திருந்தேன். அப்போ அழகா இருந்த அந்த டான்ஸை ஒரு மாதிரி காட்டி விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அப்பதான் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இந்த மாதிரி நம்ம அம்மா அப்பா நம்மளை பார்க்கவில்லையே என்று நினைத்தேன். இனிமேல் இப்படி செய்யக்கூடாது என அப்போதுதான் நான் முடிவு செய்தேன்.
வாய்ப்புகள் குறைந்தாலும் பரவாயில்லை:
நான் ஒன்றும் சதை பிண்டம் கிடையாது. என் உடலை காட்டி நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் தற்போது இருக்கும் லுக்கிலேயே என் ரசிகர்கள் என் மீது அன்பைப் பொழிகிறார்கள். அதனால அதையே ஏன் பாலோ செய்யக்கூடாது என்று அதே பாதையில் தொடர்கிறேன். நான் எடுத்த இந்த முடிவினால் எனக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒரு நாள் தான் வாய்ப்புகள் குறைகிறது என்றால், எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. என் நடிப்புத் திறமையை நம்பி எனக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள் படங்களில் நடித்துவிட்டு போவேன் என்று சாய் பல்லவி நச்சென்று கூறியுள்ளார்.