திருமணம் பற்றிய தன் அப்பாவின் கேள்விக்கு நடிகை சாய்பல்லவி சொன்ன பதில்- என்ன சொல்லி இருக்காரு பாருங்க

0
509
- Advertisement -

தன்னுடைய திருமணம் குறித்து முதன்முதலாக மனம் திறந்து நடிகை சாய் பல்லவி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. சமீபத்தில் தான் இவரின் தங்கை பூஜா கண்ணன் திருமணம் நடந்தது. பூஜாவும் சில படங்களில் நடித்து இருந்தார். ஆனால், இவரால் சாய்பல்லவி போல் சினிமாவில் கொடி கட்டி பறக்க முடியவில்லை.

-விளம்பரம்-

இதனால் சினிமாவில் இருந்து பூஜா விலகிக்கொண்டார். பின் இவருக்கு சில மாதங்களுக்கு முன் வினீத் என்பவருடன் நிச்சயத்தார்தம் நடந்தது. மிக எளிமையாக இவர்களின் நிச்சயத்தார்தம் நடந்தது. அதன் பின் சில வாரங்களுக்கு முன் சாய் பல்லவி தங்கை பூஜாவிற்கு கோத்தகிரியில் படுகர் இன முறைப்படி திருமணம் நடைபெற்றது. தன்னுடைய தங்கையின் திருமணத்தில் சாய் பல்லவி முன்னின்று அனைத்தையும் செய்து இருந்தார்.

- Advertisement -

சாய்பல்லவி தங்கை:

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று பூஜா உடைய திருமணம் சிறப்பாக நடந்திருந்தது. தன்னுடைய தங்கையின் திருமண விழாவில் நடிகை சாய் பல்லவி ஸ்பெஷலாக நடனமாடியிருந்த வீடியோ எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. பலரும் பூஜாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து சாய்பல்லவி ஏற்கனவே அளித்த பேட்டியில், நான் வயதுக்கு வந்த உடனே ஒரு படுகாவை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் சொன்னார்கள்.

சாய்பல்லவி பேட்டி:

என்னுடைய கிராமத்தில் படுகா இல்லாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவர்களை எந்த நிகழ்ச்சிகளுக்கும், இறுதி சடங்குகளுக்கும் கூட அழைக்க மாட்டார்கள். வேறு மாதிரி பார்ப்பார்கள், பேசுவார்கள். அதன் பின் நான் சினிமாவுக்கு வந்த பிறகு என்னுடைய அப்பா, என்னிடம் படுகா சமூகத்தில் இருப்பவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது கலாச்சாரம் சம்மந்தப்பட்டது என்றெல்லாம் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

திருமணம் குறித்து சொன்னது:

அவர் ரொம்ப அப்பாவியாக பேசி இருந்தார். உடனே நான், அவரிடம் கலாச்சாரத்திற்காக என்னால் நீங்கள் விரும்புவதை செய்ய முடியாது. அது ரொம்ப தவறு. எனக்கு தோன்றியதை செய்வேன் என்று கூறினேன் என்றார். மேலும் , சாய்பல்லவி அவர்கள் நடன நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. இவர் மலையாளத்தில் வெளி வந்த “பிரேமம்” என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார்.

சாய்பல்லவி குறித்த தகவல்:

அதன் பின்னர் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீப காலமாக இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ், பாலிவுட் போன்ற பல மொழி படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

Advertisement