அமரன் வரும் வேலையில் பாக்கிஸ்தான் ராணுவம் குறித்து சாய் பல்லவி பேசிய பழைய வீடியோ வைரல்

0
419
- Advertisement -

பிரபல நடிகை சாய் பல்லவி பாகிஸ்தான் ராணுவம் குறித்து பேசி இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்தியா சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பல்லவி. மலையாளத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என கலக்கிக் கொண்டிருக்கிறார். சாய் பல்லவி தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேஜர் முகுந்த் வரதராஜன் வீர மரணம் அடைந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடந்த போராட்ட சம்பவங்கள், வீர செயல்கள், குடும்பம், மனைவி, குழந்தை ஆகியவற்றை வைத்து தான் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அமரன் படம்:

இதனால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி முன்னிட்டு வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் வேலைகளில் தான் பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி பாகிஸ்தான் ராணுவம் குறித்து பேசிய பழைய வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில், ‘பாகிஸ்தானில் இருப்பவர்கள் எல்லாம் நம் இந்திய நாட்டு ஜவான்களை தீவிரவாதிகள் என்று தான் சொல்வார்கள்.

சாய் பல்லவி வீடியோ:

ஏனென்றால், நம்மை தாக்கும் ஒருவரை நாம் அப்படித்தான் சொல்லுகிறோம். அதனால், அவர்களை தாக்குபவர்களையும் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என்று கூறியுள்ளார். மேலும், ‘தி காஷ்மீரி பைல்ஸ்’ படத்தில் கூட காஷ்மீர் பண்டிதரை எப்படி அவர்கள் கொன்றார்கள் என்று காட்டினார்கள். இதை நீங்கள் மதச்சண்டையாக பார்த்தால், சமீபத்தில் கூட ஒருத்தர் தனது வண்டியில் மாட்டை வைத்துக்கொண்டு சென்றார். அவரைக் கூட சில நபர்கள் அடிக்கும்போது ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்கிறார்கள். அதனால், அப்போ நடந்த விஷயத்திற்கும் இந்த விஷயத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

-விளம்பரம்-

மதச் சண்டைகள் குறித்து சாய்பல்லவி:

நம்ம நல்ல மனிதர்களாக இருந்தால், மற்றவர்களை துன்புறுத்த மாட்டோம். நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்றால் கண்டிப்பாக நீங்கள் ஒரு நல்ல மனிதரே இல்லை என்று தான் சொல்லுவேன். நீங்கள் ஒரு நல்ல மனிதனாக இருந்தால் எங்கிருந்தாலும் அங்கு நடுநிலையாகத்தான் இருப்பீர்கள் என்று பேசியுள்ளார். சாய் பல்லவியின் இந்த பழைய வீடியோ தான் தற்போது மீண்டும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. முக்கியமாக இந்தியன் ஜவான்களை சாய் பல்லவி தீவிரவாதி என்று குறிப்பிட்டதற்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

நெட்டிசன்கள் கண்டனம்:

அதில் ஒருவர், கடந்த காலங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நமது எல்லைகளை ஊடுருவி இந்தியா மீது பல தாக்குதல்களை நடத்திய போது, அமரன் ட்ரெய்லரில் காட்டுவது போல அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். ஒருவருக்கு எப்படி புரிகிறதோ, அப்படித்தான் அவர்கள் நினைப்பார்கள். ஆனால் சாய் பல்லவியின் பேச்சு, அதே உணர்வை பிரதிபலிப்பதாக காட்டுகிறது. அதுதான் சர்ச்சையை உருவாக்குகிறது. இந்தியாஎப்போதாவது மற்ற நாடுகளின் பகுதிக்கு ஊடுருவி இருக்கிறதா? பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து எல்லா முனைகளிலும் இந்தியா தனது எல்லைகளை காக்க வில்லையா? அப்படி என்றால், இந்திய ராணுவ வீரர்கள் ஏன் பயங்கரவாதிகளாகக் கருதப்படுகிறார்கள்?. இதை அமரன் பட குழு மட்டுமே தெளிவுபடுத்த முடியும் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்

Advertisement