அவன் மட்டும் என் கையில கிடைக்கணும் – உச்சகட்ட கோபத்தில் சாய் பல்லவி.!

0
5069
sai pallavi
- Advertisement -

மலர் டீச்சர் என்றால் நமக்கு முதலில் நினைவில் வருவது நடிகை சாய் பல்லவி தான் .பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் தற்போது தெலுகு, தமிழ் என பல படங்களில் நடித்து வருகிறார்.

sai pallavi

சமீபத்தில் கூட இவர் நடிக்கும் தெலுகு படத்திற்காக 1.5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல்கள் வந்தது. மேலும் சாய் பல்லவி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தாமதமாக செல்கிறார் என்றும் சக நடிகர்களுடன் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார் என்றும் பல வதந்திகள் வந்தது ஆனால் அதனை முற்றிலுமாக மறுத்தார் சாய் பல்லவி.

- Advertisement -

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தெலுகு நடிகர் ரவி தேஜாவை காதலித்து வருவதாக வதந்திகள் வந்துள்ளது. ஆனால் ஏற்கனவே திருமணமான ரவி தேஜாவை சாய் பல்லவி எப்படி காதலிக்க முடியும் என்று ரவி தேஜாவின் தந்தை கூறியுள்ளார். மேலும் வளர்ந்து வரும் நடிகையாக சாய் பல்லவியின் வளர்ச்சியை கெடுப்பதற்காகவே யாரோ இது போன்ற வதந்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதுபற்றி சாய்பல்லவி கூறுகையில் இதுபோன்ற செய்திகளை யாரும் நம்பாதீர்கள், இந்த மாதிரியான வதந்திகளை யார் கிளப்பிவிடுகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர் மட்டும் என் கையில் கிடைத்தால் அவ்வளவு தான் என்று கடும் கோவத்தில் இருக்கிறார் சாய் பல்லவி.

Advertisement