தனக்கு ரசிகர் கோயில் கட்டியது பற்றி நடிகை சமந்தா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரண்டு வருடமாகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்தார். இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதனால் இவர் சுமார் ஒரு வருடம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். கடந்த ஆண்டு தான் சமந்தா மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சமந்தா பாலிவுட் வெப் தொடரில் நடித்திருந்தார்.
சமந்தா திரைப்பயணம்:
பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel : Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்திருந்தார். இதில் வெப் சீரியஸை ராஜ் & டிகே இயக்கத்தில் உருவாகி இருந்தது. இவர் ஏற்கனவே சமந்தாவை வைத்து பேமிலி மேன் 2 என்ற வெப் சீரிஸை எடுத்திருந்தார். இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை தொடர்ந்து சமந்தா படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

தயாரிப்பாளர் சமந்தா:
தற்போது சமந்தா அவர்கள் தயாரிப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் சமந்தா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் சுபம். இது தெலுங்கு படம். இந்த படம் மே ஒன்பதாம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் தன் படத்திற்காக செய்தியாளர்களை சந்தித்த சமந்தா, ஒரு நடிகையாக வெள்ளிக்கிழமை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும். அந்த அனுபவமும் உண்டு. ஆனால், ஒரு தயாரிப்பாளராக இதுதான் எனக்கு முதல் வெள்ளிக்கிழமை. நான் ரொம்ப பதட்டமாக இருக்கிறேன். தயாரிப்பாளர் எவ்வளவு சிரமங்களை சந்திக்கிறார் என்பது எனக்கு இப்போது புரிகிறது.

செய்தியாளர் சந்திப்பில் சமந்தா:
கடந்து ஒரு வரமாக நான் தூக்கமில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறேன். போஸ்ட் புரோடக்ஷன் டீம், மிக்சிங் டீம், எடிட்டிங் டீம் மற்றும் எல்லோருமே தூக்கம் இல்லாமல் வேலை செய்கிறார்கள். சுபம் படம் நன்றாக வந்திருக்கிறது. நல்ல கதை, படத்தின் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. நான் தயாரித்த முதல் படத்தை சுபம் என்று அழைத்ததற்கான காரணம், இந்த படம் பெரும்பாலும் சீரியல் போன்றது. சீரியலை எப்போது சுபம் கார்டு போட்டு முடிப்பார்கள் என்று எதிர்பார்ப்புதான் அனைவரின் மத்தியிலும் இருக்கும். அதனால் சுபம் என பெயர் வைத்தோம். என்னுடைய தயாரிப்பு நிறுவனம் ட்ரா லா லா என்று பெயர் வைக்கப்பட்டதற்கு காரணம், சிறுவயதில் ஒரு கவிதை படித்தேன்.

கோயில் கட்டியது பற்றி சொன்னது:
அதிலிருந்த ட்ரா லா லா என்ற வார்த்தையை தான் நான் வைத்தேன். தயாரிப்பாளராக என்னுடைய முதல் படத்தில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். காரணம், கௌதம் மேனன் ஜி எனக்கு முதல் வாய்ப்பை கொடுத்தார். அவர் நினைத்திருந்தால் அந்த நேரத்தில் எந்த டாப் ஹீரோயினும் நடித்திருப்பார். ஆனால், என்னைப் போன்ற புது முகங்களுக்கு வாய்ப்பை கொடுத்தார். ஒரு தயாரிப்பாளராக புது முகங்களை கொடுத்து மகிழ்வதை நோக்கமாக வைத்திருக்கிறேன். மேலும், ரசிகர் ஒருவர் எனக்காக கோயில் கட்டியதை அறிந்து ரொம்ப ஆச்சரியப்பட்டேன். நீங்கள் என் மீது இவ்வளவு அன்பு காட்டுகிறீர்களா என்று எனக்கு ரொம்ப வியப்பாக இருந்தது. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் விதம் .அதுதான் என்று எனக்கு புரிந்தது ஆனால், கோயில் கட்டி வைத்து இப்படி வழிபடுவதை என்னால் ஆதரிக்க முடியாது. அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.






