மல்யுத்த வீராங்கனைக்கு ஆதரவாக சமந்தா குரல் கொடுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச விளையாட்டுத் திருவிழான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அடங்கி இருக்கிறது.

மேலும், இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் தகுதி பெற்று இருக்கிறார்கள். இவர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு இருக்கிறார்கள். இதுவரை நடந்த போட்டியில் 3 பதக்கங்கள் இந்தியா வென்று இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் நம்பிக்கை தூணாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இருக்கிறார். இவர் மல்யுத்த பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரை இறுதி போட்டியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் உடன் மோதி இருந்தார்.
இந்திய வீராங்கனை வினேஷ்:
இறுதியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் இவர் கியூபா வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்று வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இன்று இறுதிப்போட்டி நடைபெற்றிருக்கிறது. இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். ஆனால், அதில் அவர் உடல் எடை அதிக காரணமாகப் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவரது உடல் எடை 50 கிலோவுக்கு மேல் சில கிராம் (100 கிராம்) கூடியதால் தான் இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
WHAT HAVE YOU DONE VINESH!!!
— JioCinema (@JioCinema) August 6, 2024
Vinesh Phogat has defeated the Tokyo Olympics GOLD medalisthttps://t.co/IPYAM2ifqx#OlympicsonJioCinema #OlympicsonSports18 #JioCinemaSports #Wrestling #Olympics pic.twitter.com/RcnydCE3mk
தகுதி நீக்கம் செய்ய காரணம் :
இந்த செய்தி இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே உடல் எடையைக் குறைக்க வினேஷ் போகத், இரவு முழுவதும் தீவிர பயிற்சி மேற்கொண்டு இருந்தார். இதனால் அவரின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வினேஷ் போகத் இறுதி சுற்றில் தகுதி நீக்கம் செய்ததற்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

சமந்தா பதிவு:
அந்த வகையில் நடிகை சமந்தாவும் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், சில சமயங்களில் மிகவும் உறுதித் தன்மை வாய்ந்த மனிதர்களுக்கே கடினமான பிரச்சனைகள் வரும். நீங்கள் தனியாள் கிடையாது. உங்களுக்கும் மேல் ஒரு சக்தி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. சிரமமான தருணங்களில் துணிச்சலாக நிற்கும் உங்களது திறன் போற்றத்தக்க ஒன்று. எப்போதும் நாங்கள் உங்களுடன் நிற்போம் என்று கூறியிருக்கிறார்.
View this post on Instagram
சமந்தா குறித்த தகவல்:
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக சமந்தா திகழ்ந்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சமீப காலமாகவே நடிகை சமந்தா அவர்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.






