நடிகை சமந்தாவின் புதிய போஸ்ட் தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக சமந்தா திகழ்ந்து கொண்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சமீப காலமாகவே நடிகை சமந்தா அவர்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதுமே சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் இவர் பதிவிடும் கருத்து சர்ச்சையாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட மருத்துவம் தொடர்பாக அறிவுரை கூறுகிறேன் என்று சமந்தா கொடுத்திருந்த டிப்ஸ் பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. அதற்குப் பின் அவர் விளக்கமும் கொடுத்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் சமந்தா போட்டிருக்கும் பதிவு தான் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சமந்தா போஸ்ட்:
அதாவது, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா, காரில் இருந்து கொண்டு கையில் ஏதோ ஒரு ஸ்லிப்பை காட்டியிருக்கிறார். அதை பார்த்தவுடன் ரசிகர்கள் பலருமே, இது பிரக்னன்சி டெஸ்ட் கிட்டா? நீங்க கர்ப்பமாக இருக்கிறீர்களா? யாராவது டேட்டிங் செய்ய போறீங்களா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அது பிரக்னன்சி கிட் கிடையாது. சமந்தா கையில் இருப்பது ஒரு பேப்பர் ஸ்லிப் தான். அதில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி டேட் போகப் போறீங்க, Find Honey on 01/08 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
View this post on Instagram
சர்ச்சைக்கான விளக்கம்:
சமந்தா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் சிட்டாடல் ஹனி பனி. இந்த படம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியாகப் போகிறது. இதை அறிவிப்பதற்காகத் தான் சமந்தா இந்த மாதிரி செய்திருக்கிறார். இதைத்தான் நெட்டிசன்கள் தேவையில்லாமல் சோசியல் மீடியாவில் வதந்திகளை எழுப்பி இருக்கிறார்கள். இதனிடையே சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார்.

சமந்தா விவாகரத்து:
தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா, நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், சமந்தா பிரிவிற்கு பின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இது ஒருபுறம் இருக்க, கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே.

சமந்தா திரைப்பயணம்:
இதற்காக இவர் தொடர் சிகிச்சை எடுத்து வந்தார். பின் கடந்த ஆண்டு அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருந்ததால் இவர் தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது இவர் பூரணமாக குணமடைந்து ஆரோக்கியமான உடல் நலத்துடன் மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.






