தன்னுடைய உடல் எடை குறித்து ரசிகரின் கேள்விக்கு நடிகை சமந்தா கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இந்தியாவின் பல மொழி படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க, கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இதனால் இவர் ஒரு வருடமாகவே சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். சமீபத்தில் தான் இவர் பூரணம் குணமாகி மீண்டும் நடிக்க வந்தார். தற்போது இவர் எல்லா மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பாலிவுட் படத்தில் நடித்து இருக்கிறார்.
சமந்தா திரைப்பயணம்:
பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் சேர்ந்து Citadel: Honey Bunny என்ற வெப் தொடரில் சமந்தா நடித்திருக்கிறார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் சமந்தா நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடர் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த வெப் தொடருக்கான ப்ரமோஷன் பணிகளில் சமந்தா மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
ரசிகர் கேள்வி:
இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சமந்தா பதிலளித்து இருந்தா.ர் அப்போது ரசிகர் ஒருவர், உங்களுடைய உடல் எடையை கொஞ்சம் அதிகமாக்குங்கள். ரொம்ப ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு சமந்தா, என்னுடைய உடல் எடையை குறித்துவரும் நிறைய கமெண்ட்களை பார்த்து வருகிறேன். உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன். நான் கடுமையான ‘strict anti-inflammatory diet’ பின்பற்றி வருகிறேன்.
சமந்தா கொடுத்த பதிலடி:
அதனால் தான் அது என்னுடைய உடல் எடை அதிகமாகாமல் தடுத்து உடல் நலனுக்கு ஏற்றவாறு என்னை வைக்க உதவுகிறது. தயவுசெய்து மனிதர்களை உடல் எடையை வைத்து மதிப்பிடும் கண்ணோட்டத்தை நிறுத்துங்கள். நாம் இப்போது 2024க்கு வந்து விட்டோம். இன்னும் இதுபோல செய்வது சரி இல்லை. ‘வாழு வாழ விடு’ என்பதை போல நாம் வாழலாம் என்று கூறியிருக்கிறார். இதனிடையே நடிகை சமந்தா அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சமந்தா திருமணம்:
இருவரும் தெனிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான ஜோடிகளாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பிரிவிற்கு பின் சமந்தா தன் கேரியரில் அதிக கவனம் செலுத்தி . தற்போது நாக சைதன்யாவுக்கு இரண்டாம் திருமணம் நடக்க இருக்கிறது.