தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பட்டைய கிளப்புகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சமந்தா அவர்கள் தான் நடித்த முதல் படத்தின் ஹீரோ ராகுல் ரவீந்திரனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குனர் ரவி வர்மன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம் தான் மாஸ்கோவின் காவிரி.
இந்த படத்தில் ராகுல் ரவீந்திரன், சமந்தா, சந்தானம், சீமான் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் தான் சமந்தா அவர்கள் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். மேலும், நடிகர் ராகுல் ரவீந்திரன் தமிழில் வின்மீண்கள், சூரியநகரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் பிசியான நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இன்று ராகுல் ரவீந்திரனுக்கு பிறந்தநாள்.
இதனால் நடிகை சமந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராகுல் ரவீந்திரன் அவர்களுக்கு ராகுல் ரவீந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியது, எனது வெளிச்சமாக இருந்ததற்கு நன்றி. உன்னை சுற்றி இருப்பவர்களுக்கு நீ கொடுக்கும் பாசிட்டிவிட்டி எல்லோரிடத்திலும் கிடைக்காது. நீ என்னுடைய இனிய நண்பர் என்று கூறுவதில் பெருமையாக இருக்கிறது என்று சமந்தா பதிவிட்டுள்ளார். இதையடுத்து சமந்தாவின் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள ராகுல் ரவீந்திரன் கூறியது,
இன்று காலை எழுந்தவுடன் உனது மிஸ்டு காலையும், இந்த ட்வீட்டையும் தான் பார்க்கிறேன். என்னை ரொம்பவே எமோஷனல் ஆக்குகிறாய் என பதிவிட்டுள்ளார். தற்போது சமந்தா தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.