முதல் முறையாக தனது காதலரை அறிமுகம் செய்த சிலம்பாட்டம் பட நடிகை சனா கான்.!

0
1254
sana-Khan
- Advertisement -

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சனா கான். 2005 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமான இவர், ஜீவா நடிப்பில் வெளியான ‘ஈ’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பரிட்சியமானார்.

-விளம்பரம்-

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை சனா கான் முதலில் தனது தொழில் வாழ்க்கையை விளம்பரப் படங்களில் நடித்துத் தொடங்கி பின்னர் திரைத்துறைக்கு வந்தார். அவர் தென்னிந்தியத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : யாஷிகாவை போல போட்டோ ஷூட்களை நடத்திய ஐஸ்வர்யா.! ஜொள்ளு விட்ட ரசிகர்கள்.! 

- Advertisement -

சிலம்பாட்டம் படத்திற்கு பிறகு பரத் நடிப்பில் வெளியான ‘தம்பிக்கு எந்த ஊரு’, பயணம், ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். இறுதியாக தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ‘AAA ‘ படத்தில் நடித்திருந்தார். சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர் தற்போது அழகு சாதன பொருட்கள் விற்கும் தொழிலை செய்து வருகிறார்.

சமீபத்தில் தனது காதலரை சமூக வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளார். தனது காதலரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சனா கான். சனா கானின் காதலரின் பெயர் எல்விஸ் லூயிசாம் மேலும், அவர் ஒரு நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement