பட வாய்ப்புகள் இல்லை..!சோப்பு விற்பனையில் இறங்கிய சிம்பு பட நடிகை..!

0
486
Sanakhan

தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சனா கான். 2005 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமான இவர், ஜீவா நடிப்பில் வெளியான ‘ஈ’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பரிட்சியமானார்.

Sana Khan

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை சனா கான் முதலில் தனது தொழில் வாழ்க்கையை விளம்பரப் படங்களில் நடித்துத் தொடங்கி பின்னர் திரைத்துறைக்கு வந்தார். அவர் தென்னிந்தியத் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

சிலம்பாட்டம் படத்திற்கு பிறகு பரத் நடிப்பில் வெளியான ‘தம்பிக்கு எந்த ஊரு’, பயணம், ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். இறுதியாக தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ‘AAA ‘ படத்தில் நடித்திருந்தார்.

Sanakhansoap

கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் அதிக வாய்ப்புக்கள் தேடி வராததால் சொந்தமாக ஒரு சிறு சோப்பு நிறுவனம் ஒன்றை நிறுவி விட்டார். தற்போது அம்மணி எப்போதும் தனது சோப்பு விற்பனை பற்றிய பரப்புரையை தான் தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.