உடல் எடையை குறைத்து உருக்கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அலேக்ஸ் பாண்டியன் பட இளம் நடிகை.

0
34513
sanusha
- Advertisement -

தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இளம் நடிகை சணுஷ்கா தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பல்வேறு குழந்தை தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். அந்த வகையில் தமிழில் 2001 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான காசி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி இருந்தார். ஆனால் தனது ஐந்து வயதிலேயே மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். காசி திரைப்படத்திற்குப் பின்னர் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா திரைப்படத்தில் திரிஷாவின் தங்கையாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மிகவும் சிறுவயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டதால் அவருக்கு பெரிதாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. கார்த்திக் நடித்த அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்தின் மூன்று தங்களில் ஒருவராக நடித்திருந்தார். இறுதியாக சசிகுமார் இயக்கத்தில் வெளியான கொடிவீரன் படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்திருந்தார் சனுஷா.

- Advertisement -

தற்போது கையில் எந்த பட வாய்ப்பும் இல்லாததால் மிகவும் கவலையில் இருக்கிறார் அம்மணி. இப்படி ஒரு நிலையில் இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாககடந்த சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார். “கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுத்தது. சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் சங்கடங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை பயமுறுத்தின. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும் தெரியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன். 

அப்போது மிகவும் பாசம் வைத்துள்ள எனது தம்பியை பற்றி யோசித்தேன். நான் இறந்துபோனால் அவனால் தாங்கி கொள்ள முடியாது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சியை கைவிட்டேன். பிறகு டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்தேன்என்று கூறியிருந்தார். சமீப காலமாக உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் சமீபத்தில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

-விளம்பரம்-

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த சிலர் ஏன் உடல் எடையை குறைதீர்கள் ? ஒல்லியாக நீங்கள் நல்லா இல்ல என்று கமன்ட் செய்தனர். இதற்கு பதில் அளித்த சனுஷா, என் உடல் எடை பற்றி என்னைவிட அதிகம் கவலைப்படும் நபர்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். நீங்கள் அழகாக இருக்கவும் உடல் எடையை குறைக்கவும் பிறக்கவில்லை. மற்றவர்களை உருவ கேலி செய்யும் போது ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் ஒருவரை இரண்டு விரலை சுட்டி காட்டினால் உங்களுக்கு எதிராகமூன்று விரல்கள் சுட்டிகாட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement