சரண்யா பொன்வண்ணன் மகள்கள் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் சரண்யா பொன்வண்ணன். இவர் உலகநாயகன் கமலுக்கே ஜோடியாக நடித்தவர். அதன் பின் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் தற்போது இருக்கும் அனைத்து ஹீரோவுக்கும் அம்மா கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார்.
ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றால் இயக்குனர்களின் முதல் சாய்ஸ் இவராக தான் இருக்கும். மேலும், பல படங்களில் அம்மாவாக நடித்து தன் அபார திறமையை நிரூபித்து இருக்கிறார் சரண்யா. இவரது நடிப்பிற்காக பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கிறார். தற்போதும் இவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். விருகம்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் ஒரு பேஷன் டிசைனிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார் சரண்யா. படங்களில் நடித்துக்கொண்டே இந்த பேஷன் டிசைனிங் ஸ்கூலில் பாடம் சொல்லி கொடுத்து வருகிறார்.
சரண்யா பொன்வண்ணன் குடும்பம்:
இதனிடையே இவர் தன்னுடன் நடித்த பொன்வண்ணனை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் குழந்தைகள் நல மருத்துவராகவும், இளைய மகள் பொதுநல மருத்துவராகவும் இருக்கிறார். சினிமாவில் மட்டுமில்லாமல் குடும்பத்தையுமே கண்டிப்புடன் சரண்யா பொன்வண்ணன் பார்த்துக் கொள்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் சரண்யா பொன்வண்ணன் மகள்கள், வீட்டில் அம்மா ரொம்ப ஸ்ட்ரீட். ஆனால், அப்பா அப்படி கிடையாது.
சரண்யா மகள்கள் பேட்டி:
நாங்கள் மருத்துவம் தான் படிக்க வேண்டும் என்பது நாங்கள் எடுத்த முடிவு. அப்பா- அம்மா இருவருமே சொன்னது கிடையாது. நாங்கள் ஆசைப்பட்டதை மட்டும்தான் நிறைவேற்றி வைத்தார்கள். ஆனால், படிப்பு என்று வரும்போது மார்க் அதிகம் இல்லை என்றால் கண்டிப்பாக திட்டு விழும். வீடு எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும் என்று அம்மா சொல்லுவார். அதனால் சாப்பிட்டு விட்டு தட்டை கழுவவில்லை என்றால் கூட திட்டுவார்.
சரண்யா குறித்து சொன்னது:
அம்மா ஷூட்டிங் போனாலும் அங்கிருந்து நாங்கள் என்ன செய்யணும், செய்ய கூடாது என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அதேபோல் தான் எங்கள் அப்பா நாங்கள் அதிகமாக மார்க் எடுக்க வேண்டும் என்பதற்காக காலை நான்கு, இரண்டு மணி என்று அதிகாலையில் எங்களை எழுப்பி விடுவார். அம்மா தான் எங்களுக்கு மெட்டீரியல் எடுத்து வந்து அவரே தைத்துக் கொடுப்பார். இதற்கு முன்பு எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான ஆடை தான் கொடுப்பார் என்று கூறி இருந்தார்கள்.
சரண்யா சொன்னது:
இவர்களைத் தொடர்ந்து நடிகர் பொன்வண்ணன், நான் ஸ்ட்ரீட் கிடையாது. என்னுடைய மனைவி தான் ஸ்ட்ரீட். நாங்கள் ரெண்டு பேருமே திரைத்தொழில் இருந்தாலும் அவர்கள் எங்களை போல வராமல் அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து கொண்டார்கள். அதேபோல அவர்கள் படிக்க நான் அதிகாலை எழ சொல்லுவேன். அந்த பொறுப்பை என்னிடம் கொடுத்ததால் நான் செய்தேன் என்று கூற, உடனே சரண்யா, அவர்கள் என்ன சாப்பாடு கொண்டு போகிறார்கள் என்பதை கூட நான் சரியா கவனிப்பேன். ஒழுக்கம் வேண்டும் என்பதற்காக தான் நான் கண்டிப்பாக இருப்பேன் என்று பதிந்திருக்கிறார்கள்.