நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் நேர்ந்த இறப்பு – பிரபலங்கள் இறப்பு.

0
1075
saranya
- Advertisement -

இந்த 2020 ஆம் ஆண்டு அனைவருக்கும் ஒரு சோகமான ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் சினிமா துறையை இந்த ஆண்டு மிகவும் சோதித்துவிட்டது. கொரோனா பிரச்சனையால் சினிமா படப்பிடிப்புகள் ஒரு பக்கம் முடங்கினாலும் இந்த ஆண்டு சினிமா துறையை சேர்ந்த பலர் உயிர் இறந்தும் உள்ளனர். பிரபல இயக்குனர் விசு, நடிகரும் மருத்துவரவுமான செய்து ராமன், பறவை முனியம்மா என்று இப்படி பல இழப்புகளை தமிழ் சினிமா இந்த ஆண்டு கண்டது.

-விளம்பரம்-
சினிமா பிரபலங்கள்

சமீபத்தில் கூட தயாரிப்பாளரும் நடிகருமான ஸ்வாமிநாதன் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்தார். இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகையான சரண்யா பொன்வண்ணன் வீட்டிலும் ஏற்பட்ட இழப்பு சினிமா பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான சரண்யா பொன்வண்ணன் 90ஸ் காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

- Advertisement -

ஆனால், சரண்யா பொன்வண்ணன் என்று சொன்னதும் நம் நினைவிற்கு வருவது இவர் சினிமாவில் நடித்த அம்மா கதாபாத்திரங்கள் தான். சினிமாவில் இவரது நடிப்பை பார்த்து சரண்யா பொன்வண்ணன் போன்று நமக்கு ஒரு அம்மா இல்லையே என்று ஏங்கியவர்கள் பலர் உண்டு. இந்த நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை, ஏ பி ராஜ் காலமாகியுள்ளார்.

ஏ பி ராஜ் மலையாளத்தில் பிரபல இயக்குனர் ஆவார். 1950 – 80 காலகட்டங்களில் இவர் மலையாளத்தில் 65 படங்களை இயக்கி இருக்கிறார். அதில் பல படங்கள் பிளாக் பாஸ்டர் ஹிட் தான். மேலும், தமிழில், துள்ளி ஓடும் புள்ளிமான், கை நிறைய காசு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக, உடல் நலமில்லாமல் இருந்த இவர், சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 95.

-விளம்பரம்-
Advertisement