‘இந்தியன் 2’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சரண்யா ரவிச்சந்திரன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான கமலஹாசன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள்.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், ராகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இந்தியன் படத்துக்கு கிடைத்த வரவேற்பு இந்தியன் 2விற்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லணும்.
சரண்யா ரவிச்சந்திரன் பதிவு:
மேலும், இந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் சரண்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இது தொடர்பாக இவர் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், இந்தியன் 2 படத்தில் நடித்ததற்கு நான் ரொம்ப சந்தோஷமாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆகவும் கருதுகிறேன். இதற்கு இயக்குனர் சங்கர் சாருக்கு தான் நன்றி சொல்லணும். அவர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார். கண்டிப்பாக என்னுடைய கதாபாத்திரம் எல்லோருடைய மனதிலும் நிற்கும் என்று நம்புகிறேன்.இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்று பதிவிட்டு இருக்கிறார்.
சரண்யா ரவிச்சந்திரன் குறித்த தகவல்:
இந்த நிலையில் நடிகை சரண்யா ரவிச்சந்திரன் குறித்த தான் இங்கு பார்க்க போகிறோம். கருப்பாக இருந்தால் படவாய்ப்புகள் கிடைக்காது என்ற பலரின் எண்ணங்களை தகிர்த்து தெரிந்தவர் சரண்யா ரவிச்சந்திரன். இவர் தன்னுடைய விடா முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும் தற்போது தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். நடிப்புக்கு நிறம் தேவையில்லை என்பதை நிரூபித்தவர். இவர் திருச்சிக்கு அருகே இருக்கும் கே.கள்ளிக்குடி என்கிற கிராமத்தை சேர்ந்த பக்கா கிராமத்து பெண்.
சரண்யா குடும்பம்:
இவரது தந்தை ஒரு விவசாயி, அம்மா சித்தாள் வேலை செய்பவர். இவருக்கு 2 தம்பி இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் படிக்கவைக்க இவரது தாய் தந்தையர் மிகவும் கஷ்டப்பட்டார்களாம். அம்மாவின் தாலியை அடமானம் வைத்து தான் கல்லூரி படிக்கும்போது பீஸ் கட்டினார் சரண்யா. படிப்பிற்காக வாங்கிய கடன், தம்பிகளை படிக்க வைக்க வேண்டும் என்ற கடமை ஆகியவற்றால் படித்து முடித்த உடனேயே வேலை தேட ஆரம்பித்திருக்கிறார். திருச்சியில் இருந்து வேலைக்காக தேட வந்த இவர் தெருத்தெருவாக அலைந்து பொருட்களை விற்கும் வேலைதான் செய்திருக்கிறார்.
சினிமா வாய்ப்பு:
ஒரு கம்பெனியில் இருந்து இன்னொரு கம்பெனியில் சேர்ந்தால் ஒரு 500 ரூபாய் அதிகமாக கிடைக்கும் என்பதாலேயே அடிக்கடி கம்பெனி மாறுவாராம். இவரது பேச்சுத் திறமையைக் கண்டு இவரது நண்பர்கள் சிலர் ‘வீ ஜே’ வாக முயற்சி செய்ய சொல்லி இருக்கிறார்கள். இதனால் இவரும் பல்வேறு நேர்காணலுக்கு சென்று இருந்தார். இவர் சென்ற இடத்தில் மூஞ்சில பல்லு மட்டும் தான் தெரியுது. நீயெல்லாம் வி.ஜேவா என்று இவரை கேலியும் செய்து இருந்தார்கள். பின் விடாமுயற்சியானல் போராடி சினிமாவில் நடித்து வருகிறார்.