தமிழ் சினிமாவை பொறுத்த கருப்பாக இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. பாலிவுட்டை போல் அல்லாமல் தமிழ் சினிமாவில் நிறத்திற்கு எந்த பாகுபாடும் காட்டப்பட்டது கிடையாது. அந்த வகையில் சமீப காலமாக தமிழ் சினிமாவில் எத்தனையோ கருப்பு நாயகிகள் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டு உள்ளனர் அந்த வகையில் சரண்யாவும் ஒருவர். சமீபத்தில் யோகி பாபு நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
யோகி பாபு , ஷீலா நடித்த இந்த படத்தின் சரண்யாவும் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார். கருப்பாக இருந்தால் படவாய்ப்புகள் கிடைக்காது என்ற பலரின் எண்ணங்களை தகிர்த்து தெரிந்தவர் சரண்யா ரவிச்சந்திரன். தன்னுடைய விடா முயற்சியினாலும், கடும் உழைப்பினாலும் தற்போது தமிழ் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். நடிப்புக்கு நிறம் தேவையில்லை என்பதை நிரூபித்தவர்.
நடிகை சரண்யா ரவிச்சந்திரன் அவர்கள் 90 குறும்படங்களில் நடித்துள்ளார்.பின் இவர் காதலும் கடந்து போகும், வடசென்னை, இறைவி என பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் உருவாகி பாதியில் நின்ற வர்மா படத்தில் இவர் நடித்திருந்தார். இவருடைய நடிப்பை பார்த்து பாலா அவர்கள் பாராட்டி இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.
ஆனால், வர்மா படம் சில பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை.இவர் நடித்த படங்களில் எல்லாம் ஒரு விதமான பரிதாபமான லுக்கில் தான் நடித்து இருந்தார். ஆனால், நிஜத்தில் படு மாடர்ன் மங்கையாக இருக்கும் இவர், சமீபத்தில் உடல் எடையை குறித்ததை காட்ட கண்ணாடி முன்பு எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.