6 வது முறை சிகிச்சை.! பணமில்லாமல் கையேந்தும் நடிகை.! இப்படி ஒரு பரிதாப நிலையா ?

0
1469
Saranya-sasi
- Advertisement -

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு கீராவின் இயக்கத்தில் வெளியான படம் பச்சை என்கிற காத்து. இப்படத்தில் நடித்தவர்தான் சரண்யா சசி. கேரளாவைச் சேர்ந்த இவர் மலையாளத்தில் மோகன்லால் நடித்த சோட்டா மும்பை, தலப்பாவு மரியா காலிப்பினலு ஆகிய படங்களில் நடித்தவர். மேலும் பல டீவித் தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.

-விளம்பரம்-

மலையாளத்தில் பிரபல நடிகையான இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் மூலை கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சியும் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் சரண்யா, பினு சேவியர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தார் சரண்யா.

இதையும் படியுங்க : காயத்தின் காரணமாக விலகிய தவான்.! அவருக்கு பதில் இங்கிலாந்து விரையும் இளம் வீரர்.! 

- Advertisement -

இந்த நிலையில் நடிகை சரண்யாவிற்கு மீண்டும் மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுவரை ஆறு ஆப்பரேஷன் நடந்துள்ள நிலையில் அவருக்கு மீண்டும் ஆபரேஷன் செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால சக நட்சத்திரங்கள் அவரது மருத்துவ செலவுக்கு உதவ வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

சரண்யாவின் நிலையை அறைந்த கேரள சமூக சேவகர் சூரஜ் பாலகரன், நடிகை சீமா, ஜி நாயர் ஆகியோர் இணைந்து முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றைவெளியிட்டனர். அதில் சரண்யா சசியின் மருத்துவ செலவுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்து இருக்கின்றனர். ஏற்கனவே சரண்யா சசி 6 முறை அறுவை சிகிச்சை செய்து இருக்கிறார் என்றும், 7வது முறையாக தற்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதில் தெரிவித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

7வது முறை சிகிச்சைக்கு சரண்யாவிடம் போதிய பணம் இல்லாததால் இவரது நிலையை கண்டு பலரும் வருந்தி வருகின்றனர். மேலும், தற்போது ஒரு சிலர் சரண்யாவின் சிகிச்சைக்கு உதவி வருகின்றனர். தற்போது சரண்யாவின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் அதனால் அவரது சிகிச்சைக்கு உதவுமாறு சரண்யாவின் அம்மாவும் உதவி கேட்டுள்ளார்.

Advertisement