காயத்தின் காரணமாக விலகிய தவான்.! அவருக்கு பதில் இங்கிலாந்து விரையும் இளம் வீரர்.!

0
1104
Shikar

இந்த ஆண்டிற்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அதில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியிலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் தவான் சதமடித்து அசத்தினார்.

இந்த இரு போட்டிகளை அடுத்து இந்திய அணி வரும் 13 ஆம் தேதி நியூஸிலாந்து அணிக்கு எதிராக போட்டியிடவுள்ளது. இந்த நிலையில் இந்திய அணிக்கு ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரர் ஷிகார் தவான் காயம்ஏற்பட்டது. அவரது பெருவிரலில் சிறிய முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் 2 முதல் 3 வார காலம் ஓய்வெடுக்க அறிவுறுத்தபட்டுள்ளது.

இதையும் படியுங்க : ஆல்யா மானஸாவா இது சின்ன வயசுல இபப்டி இருகாங்க.! இதுவரை காணாத புகைப்படம்.! 

- Advertisement -

காயம் காரணமாக விளையாட முடியாததால் அவருக்கு பதில் யார் விளையாட போவது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். ஷிகர் தவனுக்கு பதிலாக அதிரடி ஆட்டக்காரர்களான ரிஷப் பண்ட் அல்லது ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய இருவரில் ஒருவர் இந்திய அணிக்கு தீர்வாக உள்ளனர் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

Image result for shikhar dhawan

இந்நிலையில் தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் இந்திய அணி மாற்று வீரராக இங்கிலாந்து அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று அல்லது நாளை பண்ட் இங்கிலாந்து சென்று அடைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இங்கிலாந்து அனுப்பினாலும் அவரை மாற்று வீரராக இன்னும் அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ அறிவிக்கவில்லை.

-விளம்பரம்-

ஏனெனில் தாவனின் காயம் மீண்டும் பரிசோதிக்கபட்டு ஒருவேளை அவர் உடற் தகுதி பெற்றுவிட்டால் தவானே மீண்டும் அணியில் தொடர்வார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

மேலும் கோலி, தோனி, பாண்டியா மற்றும் ராகுல் என அனைவருமே சிறப்பாக விளையாடி வருவதால் அடுத்தடுத்த போட்டிகளை காண ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஷிகர் தவான் இந்த உலக கோப்பையின் முதல் போட்டியில் 8 ரன்களும் இரண்டாவது போட்டியில் 117 ரன்களும் எடுத்தார் என்பது குறியிடத்தக்கது.

Advertisement