மகனின் TESLA காரை ஓட்டிய எதிர் நீச்சல் சீரியல் நடிகை – விலை எவ்வளவு தெரியுமா?

0
305
- Advertisement -

பிரபல நடிகை சத்யப்பிரியா, தனது மகனின் டெஸ்லா காரை ஓட்டியதின் அனுபவத்தை பகிர்ந்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சத்யப்பிரியா 1954 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என முன்னுருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் 50 படங்களுக்கு மேல் ஹீரோயின் ஆக நடித்துள்ளார் சத்யப்பிரியா. 1975 ஆம் ஆண்டு ‘மஞ்சள் நிற முகமே’ என்ற தமிழ் படத்தில் விஜயக்குமாருக்கு ஜோடியாக இவர் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் தீபம், சக்ராயுதம், மனிதரில் இத்தனை நிறங்களா, புதிய பாதை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பின் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் குறைந்ததும் அம்மா கேரக்டரிலும், வில்லி கேரக்டரிலும் நடிக்க துவங்கினார் சத்யப்பிரியா. அஞ்சலி, எதிர்காற்று, அக்னி பறவை, ரோஜா, மேட்டுப்பட்டி மிராசு, லேசா லேசா, மாயி, காதலுடன், பகவதி, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல படங்களில் சத்யப்பிரியா நடித்திருக்கிறார். படங்களில் வாய்ப்புகள் குறைந்ததும் அடுத்து சீரியலில் களமிறங்கினார்.

- Advertisement -

சத்யப்பிரியா குறித்து:

அந்த வகையில் இவர் கோலங்கள், ரோஜா கூட்டம், சாந்தி நிலையம், வம்சம், கல்யாணப்பரிசு, மகாலட்சுமி, நீதானே என் பொன்வசந்தம், எதிர்நீச்சல் போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். குறிப்பாக இவர் நடித்த எதிர்நீச்சல் சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில் விசாலாட்சி கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்த சீரியலை பிரபல இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தார். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியல் திடீரென முடிக்கப்பட்டது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

சத்யப்பிரியா வீடியோ:

இந்நிலையில் நடிகை சத்யப்பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஆட்டோமேட்டிக் டெஸ்லா கார் ஓட்டியதின் அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். வீடியோவில் ஸ்டைலாக டெஸ்லா காரை ஓட்டிய சத்யபிரியா, இப்போ நான் எதுவுமே பண்ணல ஸ்டாப் சிக்னலை பார்த்தவுடனே அதுவே ஸ்டாப் ஆகிவிடும். அதேபோல் நான் வண்டியை திருப்பவில்லை. அதுவாக ஆட்டோமெட்டிக்காக திருப்புகிறது பார்த்தீங்களா. ஸ்டேரிங்கை நம்ம திருப்பத் தேவையில்லை. ஆனால் அதன் மீது நம் கை வைத்திருக்க வேண்டும்.

-விளம்பரம்-

காரின் விலை:

அப்போதான் நம்ம ஆக்டிவா இருக்கிறோம் தூங்கவில்லை என்று அதற்கு தெரியும். இந்த அழகான ஆட்டோமேட்டிக் கார் என்னுடைய பையனுடைய டெஸ்லா என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை சத்யப்பிரியாவின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்தக் கார் என்ன விலை என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கு அவரும் கூடிய விரைவில் சொல்கிறேன் என்று கமெண்ட்டுகளுக்கு ரிப்ளை கொடுத்து வருகிறார். சத்யப்பிரியா குறிப்பிட்டுள்ள ஆட்டோமேட்டிக் டெஸ்லா காரின் விலை 80 முதல் 90 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.

சத்யப்பிரியாவின் மகன்:

நடிகை சத்யப்பிரியாவின் மகன் கடந்த ஆண்டு ஒரு பேட்டியில், தான் அமெரிக்காவை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ததாக குறிப்பிட்டு இருந்தார். அவர் வாஷிங்டன் மாகாணத்தில் வேலை செய்த போது, நியூ ஜெர்சியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இவர்களின் காதல் ஒரு ரயில் பயணத்தில் தொடங்கியதாம். பிறகு இவர்களின் காதலுக்கு சத்யப்பிரியாவும் ஓகே சொல்லி திருமணம் நடத்தி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement