கேரக்டர் பிரச்சனை, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விலகல்- நடிகை சத்யா சாய் கொடுத்த விளக்கம்

0
333
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விலகியதற்கான காரணம் குறித்து நடிகை சத்யா சாய் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்த சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி இருந்தது.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு தான் இந்த சீரியல் முடிவடைந்தது. இதை அடுத்து தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் முதல் சீசனில், அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பாவாக அண்ணனாகவும், ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வெங்கட், ஆகாஷ் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் வசந்த் இந்த தொடரில் இருந்து விலக, அவருக்கு பதில் வெங்கட் இணைந்துள்ளார். சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவர் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்கள் எதிர்பாராத விதமாக காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் பாண்டியன் ரொம்பவே மனமுடைந்து போகிறார்.

சத்யா சாய் குறித்த தகவல்:

பின் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைக்கிறார். தங்கமயில் பாண்டியன் வீட்டிற்கு வந்ததிலிருந்து கலாட்டா கலவரங்களாக சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும், இந்த சீரியலில் பாண்டியன் கடைசி மகளாக அரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சத்யா சாய். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

-விளம்பரம்-

சத்யா சாய் பேட்டி:

அந்த சீரியலில் சில எபிசோடுகள் தான் இவர் வந்தார். பின் திடீரென்று விலகிவிட்டார். இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியில் சத்யா சாய், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசிவரை உங்கள் கேரக்டர் இருக்கும் என்று சொல்லி தான் போட்டோ சூட் எடுத்தார்கள். போட்டோ சூட்டுமே நல்லபடியாக முடிந்தது. முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடிக்கணும் என்று போட்டோ சூட் எடுத்தார்கள். நடிக்க ஆரம்பித்தபோது ஒரு சில வாரங்கள் சென்றது.

சீரியலில் விலக காரணம்:

கடைசியில் சீரியலில் முஸ்லிம் கதாபாத்திரம் இருப்பது கொஞ்சம் பிரச்சினையாக இருக்கிறது. பின் அந்த கேரக்டர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் தான் நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்திலிருந்து விலகினேன். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிப்பது சந்தோஷமாக கருதுகிறேன். என்னை பலருமே ஞாபகம் வைத்து கூப்பிடுகிறார்கள். எனக்கும் அரசி கேரக்டர் ரொம்ப பிடித்து இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement