குடிப்பழக்கம், விரட்டி அடித்த பிள்ளைகள், கோமா – கடைசி காலத்தில் கொடுமையாக இறந்த சாவித்ரியின் கதை.

0
5137
savithri
- Advertisement -

இந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான புகழ்பெற்ற, பழம்பெரும் நடிகையாக திகழ்ந்தவர் சாவித்திரி. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கி இருந்தார். இவர் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த கல்யாணம் பண்ணிப்பார் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக திகழ்ந்தார். அதேபோல் இவர் தமிழ்மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழிகளிலும் 320க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஆந்திர மாநிலத்தில் பிறந்திருந்தாலும் தமிழில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர். மேலும், இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவந்த நடிகையர் திலகம் படம் மீண்டும் நம்மை பழைய நினைவுக்கு கொண்டு சென்றது.

-விளம்பரம்-

இந்த படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ்க்கு ஏகப்பட்ட பாராட்டுகளும் தேசிய விருதும் கிடைத்தது என்று சொல்லலாம். இவரைப்பற்றிய பலரும் அறியாத விஷயங்களை தான் இங்கு பார்க்க போகிறோம். இவருடைய நடிப்பையும், குணங்களையும் உணர்ந்த கவிஞர் கண்ணதாசன் அவருடைய சிந்தனையில் இவருக்காக பாடல் வரிகள் கூட எழுதி இருந்தார். ‘ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ, உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ, பார்வையிலே குமரியம்மா பழக்கத்திலே குழந்தையம்மா’ என்ற பாடலை பாடியிருந்தார். இப்படி சினிமா வாழ்க்கையில் பல சாதனைகளைப் புரிந்த இவர் சினிமா வாழ்க்கையில் நல்லது கெட்டது எது பண்ணி இருந்தாலும் அதை வைத்து அவரை களங்கம் கற்பித்து விட முடியாது.

- Advertisement -

சாவித்திரி பற்றி நடிகர் திலகம் சொன்னது:

பாலினும் வெண்மை, பனியிலும் மென்மை போன்றவர் சாவித்திரி. அதுமட்டுமில்லாமல் ஒரு சாவித்திரி அழகு பதுமையை போன்றவர். மேலும், சினிமா உலகில் இவருடைய நடிப்பு திறமைக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தது. இதனால் சாவித்திரி அளவுக்கு சரோஜாதேவியால் போட்டியிட முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் சாவித்திரியின் நடிப்பு திறமையை சரோஜாதேவியால் நெருங்க முடிந்ததில்லை. அதோடு தெலுங்கு பெண்ணாக இருந்தாலும் தமிழ் பிள்ளையாகவே வளர்ந்தார். மேலும், நடிகர் திலகம் ஒரு முறை நடிகையர் திலகம் குறித்து பெருமையாக பேசி இருந்தார்.

வறுமையில் உதவிய சாவித்ரி:

அதேபோல் சரஸ்வதியின் சபதம் படத்தில் சரஸ்வதி வேடத்தில் சாவித்ரி நடித்து இருந்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார். பின் மேக்கப் முடித்து ஆடை அலங்காரத்துடன் ஸ்டூடியோவுக்குள் சாவித்திரி வரும் போது எல்லோரும் தீபாரதனை காட்டி அவரை கலைமகள் ஆகவே அனைவரும் பாவித்து இருந்தார்கள். அப்படி ஒரு தெய்வம்சம் பொருந்தியவர். பின் வறுமை அவரை கொஞ்சம் கொஞ்சமாக வாட்டி கொண்டிருக்கும் நிலையிலும் கூட தன் ரசிகர் ஒருவரின் அவசர தேவைக்காக தான் பெற்ற ஷீல்ட்களை எல்லாம் சேர்த்து கடையில் 10,000 ரூபாய்க்கு விற்று தந்தார்.

-விளம்பரம்-

சாவித்ரி- ஜெமினி காதல்:

அந்த அளவிற்கு தன் ரசிகர்களுக்காக எதையும் செய்யும் இளகிய மனம் கொண்டவர். அதோடு விலை உயர்ந்த பட்டு சேலையை விற்று டிரைவரின் மகள் திருமணத்திற்கு உதவினார். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்பது சொல்வார்கள். அதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் சாவித்திரி. இப்படி சினிமாவில் மட்டும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையிலும் சாவித்திரி ஒரு உதாரணமாகவே இருந்தார். சிறந்த ஜோடி தேர்வு என்ற நிகழ்ச்சியில் ஜெமினி- சாவித்திரி தான் முதல் பரிசை பெற்றிருந்தார்கள். இருந்தாலும் சாவத்திரி வாழ்க்கையில் சில கட்டத்தில் தோல்வி அடைந்ததற்கு ஜெமினியின் காதல் மன்னன் லீலைகள் தான் காரணம்.

ஜெமினி கணேசனின் சுய ரூபம்:

12 வயதில் சினிமா வாய்ப்பு கேட்டு சென்னைக்கு வந்தார் சாவித்திரி. முதன்முதலாக அவர் ஜெமினியை தான் சந்தித்தார். பின் 32 வயதில் ஜெமினி உடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஜெமினிக்கு ஏற்கனவே அலமேலு என்பவரை திருமணம் செய்துகொண்டு குழந்தையோடு வாழ்ந்திருந்தார். பின் புஷ்பவல்லி என்ற நடிகையுடன் தொடர்பு கொண்டு திருப்தி கொள்ளாத மனநிலையில் ஜெமினி இரண்டாவதாக திருமணம் செய்திருந்தார். ஆனால், இது சில காலம் கழித்து தான் சாவித்திரிக்கு அவருடைய முழு சுயரூபம் தெரியவந்தது. பின் ஜெமினியின் முதல் மனைவி சாவித்திரி மீது கடும்கோபம் கொண்டு காரை ஏற்றி கொல்ல முயற்சி செய்திருந்தார்.

சாவித்திரியின் மது பழக்கம்:

இப்படி ஜெமினி உடன் சாவித்திரியின் வாழ்க்கை என்பது வெறும் 17 வருடங்கள் தான். அதற்கு பிறகு இருவரும் சில மனக்கசப்பு விஷயத்தால் பிரிந்தார்கள். இதற்கெல்லாம் காரணம் ஜெமினியின் அலைபாயும் மனது. தனது 70 வயதில் கூட செகரட்டரி ஜூலியானாவை ஜெமினி திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தியிருந்தார் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இப்படி சாவித்திரி தான் தேடிக்கொண்ட வாழ்க்கை சரியில்லாதபோது என்ன செய்வார்? பின் மனம் வேதனையில் இருந்தார். அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஒரு முறை சாவித்திரி இந்தோனேசியா சென்றார். அங்கே விருந்தளித்த அந்நாட்டு அதிபர் சுகர்னோ மது அருந்தும்படி சாவித்திரியை வற்புறுத்தி இருந்தார்.

சாவித்ரி- சந்திரபாபு பழக்கம்:

அதிபரின் விருப்பத்திற்காக சாவத்திரி மது அருந்தினார். அப்படியே சாவித்திரிக்கு மது பழக்கம் ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் சந்திரபாபுவின் தோழமை சாவித்திரிக்கு ஆறுதலாக இருந்தது. மாலையில் சாவத்திரிக்கு மது அருந்துவதற்கு கம்பெனி கொடுப்பவராக சந்திரபாபு இருந்தார். பின் இருவருமே படமெடுத்து நஷ்டப்பட்டு குடித்து தங்களுடைய வாழ்க்கையை தொலைத்தவர்கள். உன்னால நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்பதற்கு உதாரணமாக சாவித்திரி- சந்திரபாபு இருந்தார்கள். பின் வீடு வாசல் அனைத்தையும் இழந்து சாவத்திரி வறுமையின் பிடியில் தவித்து வந்தார். பின் வறுமையின் காரணமாக சாவித்திரி மலையாள மொழி படத்தில் கவர்ச்சியாக, குடிகாரியாக நடித்திருந்தது ரசிகர்கள் பலருக்கும் வேதனை அளித்திருந்தது.

வறுமையில் வாடிய சாவித்ரி:

அது மட்டுமில்லாமல் தன் புகழுக்கு பங்கம் விளைவிக்கும் கதாபாத்திரம் என்று தெரிந்து நடிகை சாவித்திரி நடித்தார். இதனால் தமிழ் ரசிகர்கள் கோபமடைந்து எரிமலையாய் வெடித்து பயங்கரமாக கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் எம்ஜிஆர் பணம், வீடு கொடுத்து சாவித்ரிக்கு உதவினார். இருந்தும் சாவத்திரி, எம்ஜிஆர் செய்த உதவியை நல்ல விதத்தில் பயன்படுத்தவில்லை. பிறகு வறுமையின் பிடியில் இருந்து நோயின் பிடியில் சாவித்திரி சிக்கிக்கொண்டு தன்னுடன் யாரும் பேச மாட்டார்களா? பழக மாட்டார்களா? என்று ஏங்கி கடைசி நாட்களை எண்ணி கொண்டு இருந்தார். பணத்துக்காக பலரிடம் கை நீட்டினார்.

சாவித்திரியின் இறப்பு:

அவருடைய பிள்ளைகள் கூட அவரை விரட்டி அடித்து விட்டார்கள். பின் சாவித்திரி உடல்நிலை மோசமாக மாறி 19 மாதங்கள் கோமா நிலையில் இருந்தார். சாவித்திரி 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி சென்னை லேடி வெலிங்ஸ்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருடைய இறப்பிற்கு ஒட்டுமொத்த திரையுலகம், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். இப்படி சாவித்திரி ஆயிரத்தில் இல்லை கோடான கோடிகளில் ஒருத்தியாக இருந்தார்.

Advertisement