1990ல் நாயகியாக நடித்துள்ள சயீஷாவின் அம்மா – எப்படி இருந்துள்ளார் பாருங்க.

0
7937
saye
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா, பிரசன்னா – ஸ்னேகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் ஆர்யா – சயீஷா ஜோடியும் ஒருவர். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி படு கோலாகலமாக நடைபெற்றது.

-விளம்பரம்-

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார்.இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கூட நடைபெற்றது.

- Advertisement -

ஆனால், அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளவில்லை ஆர்யா. இருப்பினும் 38 வயதில் 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்த்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்த சில மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் ஒன்றாக ‘டெட்டி’ படத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல சயீஷாவின் அம்மாவும் பிரபல நடிகை தான். இவர் இந்தியில் 1990 ஆம் ஆண்டு வெளியான மகா சங்கரம், ஆயி மிலன் கி ராட் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சயீஷாவின் அம்மா, அதாவது ஷாஹீன், பிரபல பாலிவுட் நடிகர்களான திலீப் குமார் மற்றும் சைராபானுவின் நெருங்கிய உறவினர். மேலும், ஷாஹீன், பிரபல பாலிவுட் நடிகர் சுமித் சைகள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-
Advertisement