மணிமேகலை இதனால தான் நிகழ்ச்சிய விட்டு போனாள்- ப்ரியங்காவிற்கு ஆதரவாக பேசிய நடிகை ஷகீலா

0
232
- Advertisement -

ப்ரியங்காவிற்கு ஆதரவாக ஷகீலா பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே மணிமேகலை- பிரியங்கா சர்ச்சை தான் இணையத்தில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-

இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. நான் ரொம்ப நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், எப்போதும் என்னுடைய 100% முயற்சியையும், கடின உழைப்பையும் கொடுத்தேன். 2019 இல் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கிறேன். ஆனால், சுயமரியாதையை விட முக்கியமானது எதுவுமே கிடையாது. என்னுடைய வாழ்க்கையின் எல்லா நேரத்திலும் நான் அதை கண்டிப்பாக பின்பற்றி வருகிறேன். புகழ், பணம், தொழில் வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுயமரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம் தான்.

- Advertisement -

மணிமேகலை பதிவு:

அதனால் தான் நான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். குறிப்பாக, அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். ஆனால், அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார். அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

பிரபலங்கள் கருத்து:

இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அதோடு பலரும் பிரியங்காவை விமர்சித்து திட்டியும் வருகிறார்கள். இந்த நிலையில் பிரியங்காவிற்கு ஆதரவாக நடிகை ஷகீலா பேட்டியில், இது ஒரு தேவையில்லாத பிரச்சனை என்று தான் சொல்லுவேன். பிரியங்கா, மணிமேகலை இரண்டு பேரையுமே எனக்கு தெரியும். ஒரு பெண்ணை பற்றி இப்படி அவதூறாக யாரும் பேச தேவையில்லை. அவள் ஒரு திருமணமான, விவாகரத்தானவர். அவரைப் பற்றி மோசமாக கமெண்ட் பண்ணுகிறார்கள். அவள் இந்த இடத்திற்கு வருவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டு உழைத்து தான் வந்தார்.

-விளம்பரம்-

ஷகீலா பேட்டி:

அதேபோல் மணிமேகலைக்கும் ஆங்கர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. அதையும் அவர் பிடித்தார். ஆனால், அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளத் தெரியவில்லை. நிகழ்ச்சியில் தன்னைவிட ஒரு சீனியர் ஆங்கர் இருப்பதால் வந்த பயத்தினால் தான் அவர் இப்படி செய்திருக்கிறார். எனக்கு பிரியங்கா, மணிமேகலை இருவருடைய மனநிலையும் தெரியும். அதேபோல் மணிமேகலை தானாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறவில்லை. நான் இதைப் பற்றி நிகழ்ச்சியின் தயாரிப்பாளரிடம் விசாரித்தேன். அவர்கள் நிகழ்ச்சிக்காக ஒத்துப் போக வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், மணிமேகலை தான் முடியாது என்று மறுத்தார்.

பிரியங்கா குறித்து சொன்னது:

உடனே உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்ளலாம் என்று சொன்னவுடன் தான் மணிமேகலை விலகிவிட்டார். அவராக நிகழ்ச்சியை விட்டு வெளியேறவில்லை. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் மணிமேகலை ஆசைப்பட்டபடி ஆங்கர் ஆகி இருக்கலாம். அவளுக்கு உள்ளுக்குள் பிரியங்காவை பார்த்து ஒரு பயம். ஆங்கர் இடம் பறிபோகி விடும் என்ற எண்ணத்தினால் தான் அவர் இப்படி செய்துவிட்டார். அதேபோல் நிகழ்ச்சியின் கண்டன்டுக்காக தேவை என்பதால் பிரியங்கா பேசும் சிறப்பான பேச்சுக்கள் எல்லாம் எடிட் செய்து கடைசியில் போடுவார்கள். இதனால் எல்லாம் அவர் பக்கம் திரும்பிடுவார்கள் என்று பிரியங்காவை பேச வேண்டாம் என்று மணிமேகலை தடுத்தார். இந்த நிகழ்ச்சியில் சுயமரியாதைக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது. மணிமேகலை எனக்கு மகள் போன்றவள். இருந்தாலுமே நியாயத்தின் பக்கம் தான் நான் பேச முடியும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement