கடந்த சில வாரங்களாகவே ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது. இது தொடர்பாக விசாரணையும் நடத்தி கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ, வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் அரசு வெளியிடாமல் இருந்தது.
பின் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ஷகீலா, நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் எங்களுக்கு ஆடையை மாற்ற சரியான இடம் கூட இல்லை.
ஷகீலா பேட்டி:
குறிப்பாக, ரிமோட் இடங்களுக்கு போகும் போது மேலே ஒரு பெரிய ஆடையை போட்டுவிட்டு நாங்கள் உடையை மாற்றும் நிலையெல்லாம் இருந்தது. அந்த நேரத்தில் எங்களை சுற்றி நூற்றுக்கணக்கான ஆண்கள் நின்று கொண்டிருந்தார்கள். அதுதான் மிகப்பெரிய கொடுமையே. அதையெல்லாம் கடந்து தான் நாங்கள் வந்தோம். இப்போது இருப்பது போல் கேரவன் கலாச்சாரம் எல்லாம் அப்போது பெரிதாக கிடையாது. அதேபோல் நீங்கள் நினைக்கும் மாதிரி கேரவனில் உடைமாற்றும் விஷயங்கள் மட்டும் நடப்பதில்லை.
கேரவன் ரகசியம்:
உணவு அருந்துவது, உடலுறவு கொள்வது போன்று நிறைய விஷயங்கள் நடந்திருக்கிறது. இதை நான் நேரில் பார்க்கவில்லை என்றாலும் என் காதார நிறைய பேர் பேசி கேட்டிருக்கிறேன். ரூபாஸ்ரீ என்ற நடிகை படத்தின் சூட்டிங் போது ஒரு அறைக்குள் இருந்தார். அப்போது ஒருவர் அவருடைய கதவைத் தட்டி வெளியே அழைத்து அவருக்கு உதவியது தேவைப்படுமோ என்று கேட்டு இருந்தார். ஆனால், எனக்கு அது போல எதுவும் நடக்கவில்லை. ஒரு 15 வருடங்களுக்கு முன்பு நான் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் தான் நடித்தேன்.
சினிமா குறித்து சொன்னது:
அந்த வகையில் ஒரு படத்தில் நான் அன்னை தெரசாவாக நடித்திருந்தேன். அந்த இயக்குனர், என்னுடைய கண்ணில் காமம் தெரியவில்லை, இரக்கம் தான் தெரிகிறது. அதனால்தான் அந்த கதாபாத்திரத்தில் உங்களை நடிக்க வைக்கிறேன் என்றெல்லாம் கூறியிருந்தார். அதேபோல் நானும் அந்த படத்தில் சந்தோசமாக தான் நடித்தேன். ஆனால், 15 வருடங்கள் கழித்தும் அந்த படம் வெளியே வரவில்லை.
மலையாள சினிமா குறித்து சொன்னது:
அதற்குப்பின் இந்த படத்தை வெளியிடவே வேண்டாம் என்று அந்த இயக்குனரிடம் சொல்லிவிட்டேன். மலையாள உலகில் எப்போதுமே ஒரு அதிகார குழு இருந்து தான் வருகிறது. அவர்கள் இன்னும் அந்த திரைத்துறையில் ஆதிக்கம் தான் செலுத்துகிறார்கள். அந்த அதிகார குழுவில் மோகன்லால், மம்முட்டி தவிர முகேஷ் உட்பட பலர் இருக்கின்றார்கள். ஆனால், அந்த குழுவில் முக்கியமானவர் மோகன்லால் தான் என்று நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார்.