நான் திருமணம் செய்யாததற்கு இது தான் காரணம் – மனம் திறந்து நடிகை ஷகீலா சொன்னது

0
130
- Advertisement -

தனக்கு திருமணம் ஆகாது குறித்து நடிகை ஷகீலா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். ஏன்னா, போதும் போதும் என்ற அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

பின் இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம். இவருடைய கவர்ச்சி படங்களுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை. மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாக எடுத்து இருக்கிறார். மேலும், இளமை போன பின்னரும் இவர் பல படங்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ஷகீலா திரைப்பயணம்:

கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் மாற்றி இருக்கிறது. கடந்த இரண்டாம் சீசனில் ஷகீலா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதில் இவர் மிக திறமையாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷகீலா:

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷகீலா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அது மட்டுமில்லாமல் சமூகம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு சகிலா குரல் கொடுத்து வருகிறார். இதனை அடுத்து சமீபத்தில் தெலுங்கில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக சகிலா கலந்து கொண்டிருந்தார். ஆனால், இவர் உள்ளே சென்ற வேகத்திலேயே வெளியே வந்து விட்டார்.

-விளம்பரம்-

ஷகீலா அளித்த பேட்டி:

தற்போது இவர் பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்து வைக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு திருமணம் ஆகாது குறித்து ஷகீலா, திருமணம் செய்து கொண்டு ஒருவர் முகத்தையே என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் தான் நான் திருமணம் செய்து கொள்ள வில்லை. அதேபோல் என்னுடைய தங்கை என்னை ஏமாற்றி விட்டார்.

திருமணம் ஆகாத காரணம்:

என்னுடைய மொத்த பணத்தையும் என்னுடைய தங்கை ஏமாற்றி எடுத்துக் கொண்டார். அதனால் நான் ஜீரோவில் இருந்து தான் என்னுடைய வாழ்க்கையை மீண்டும் தொடங்கினேன் என்று பேசி இருக்கிறார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement