ஷகிலா மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை அவருடைய வளர்ப்பு மகள் சீத்தல் கூறி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். போதும் போதும் போதும் என்ற அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் ஆரம்பத்தில் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார்.
https://www.youtube.com/watch?v=FSFJOrDtxME&t=1s
பின் குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி ரோலில் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள கவர்ச்சி படங்களில் தான். கவர்ச்சி நாயகியாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த ’நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் சகிலா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் நடிகை ஷகிலா மீது தாக்குதல் நடத்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகை சகிலாவின் அண்ணன் மகள் சீத்தல். இவரை 6 மாத குழந்தையாக இருக்கும்போது இருந்தே சகிலா வளர்த்து வந்து இருக்கிறார்.
சகிலா அளித்த புகார்:
இப்படி இருக்கும் நிலையில் நேற்று ஷகிலாவை அவருடைய வளர்ப்பு மகள் சீத்தல் கொடூரமாக தாக்கியிருக்கிறார். இதற்கு காரணம் சகிலாவிற்கும் அவருடைய வளர்ப்பு மகள் சீத்தல் குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் சீத்தல், சீத்தலுடைய தாய் சசி, அவருடைய சகோதரி ஜமீலா ஆகியோர் சேர்ந்து சகிலா மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதை அடுத்து சமாதானம் பேச சென்ற ஷகிலாவின் பெண் வழக்கறிஞரையும் சீத்தல் குடும்பம் பயங்கரமாக தாக்கி இருக்கிறார்கள். இதனால் சகிலா தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இதற்கான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
View this post on Instagram
சீத்தல் பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக சீத்தல் செய்தியாளர்களை சந்தித்து, எனக்கும் அத்தைக்கும் சில நாட்களாகவே பிரச்சனை இருந்தது உண்மைதான். எனக்கும் அவருக்கும் இடையே நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நான் என்னுடைய அம்மாவிடம் சென்று விட்டேன். காரணம், அவர் என்னுடைய அம்மாவையும் சகோதரியையும் தப்பாக பேசி இருந்தார். பின் என்னுடைய அத்தை அவருடைய நண்பர் தங்கம் என்பவரின் மூலம் என்னை வீட்டிற்கு வர சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். நானும் என்னை வளர்த்தவர்கள் என்ற காரணத்தினால் அவர் வீட்டிற்கு போனேன். ஆனால், அவரிடம் பேசவில்லை.
ஷகீலா மீதான குற்றச்சாட்டு:
மீண்டும் என்னுடைய அத்தை, என் அம்மாவையும், என் சகோதரியும், என்னையும் ரொம்ப ரொம்ப தப்பாக பேசி இருந்தார். உடனே, நீங்கள் சரியாக இருக்கிறீர்களா? உங்கள் தம்பி சரியாக இருக்கிறாரா? எங்களை எப்படி நீங்கள் இப்படி பேசலாம் என்று சொன்னவுடன் அவர் என்னை அடித்து விட்டார். நானும் பதிலுக்கு அவரை அடித்தேன். பின் என்னுடைய அத்தையின் வழக்கறிஞர் சௌந்தர்யா என்னிடம் வந்து மன்னிப்பு கேட்க சொன்னார். நான் முடியாது என்று சொன்னேன். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அவர் கையில் இருந்த ஒரு பொருளை என் மீது எடுத்து அடித்தார். அதனால் தான் நான் அவரை அடித்தேன். அப்போது அவர் என் அம்மாவுடைய தலைமுடியை பிடித்து அடித்தார். உடனே என் சகோதரி வந்து தடுத்தார். இதையெல்லாம் என்னுடைய அத்தை உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
சண்டை காரணம்:
அவர்கள் அடித்ததால் தான் நாங்கள் அடித்தோம் தவிர நாங்களாக யாரையும் வேண்டுமென்றே அடிக்கவில்லை. பின் அவர்கள் குடித்துவிட்டு ரொம்ப தவறாக பேசியிருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் இரண்டு மூன்று ஆண்களை வைத்து எங்கள் வீட்டிற்கு அனுப்பி மிரட்டி இருந்தார்கள். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் எங்கள் மீது பொய் புகார் கொடுப்போம் என்றெல்லாம் சொன்னார்கள். பின் போலீஸ் இடம் நாங்கள் சொன்னோம். அவர்களும் இந்த பிரச்சனை சுமூகமாக முடித்து விடுங்கள் என்று சொன்னவுடன் நாங்களும் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனை முடித்து விடலாம் என்று நினைத்தோம். ஆனாலும், அவர்கள் எங்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.





