20 ஆண்டுகளுக்கு பின் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஷாலினி? அதுவும் இந்த இயக்குனர் படத்தில்.

0
1469
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் மனைவி ஷாலினியும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்த குழந்தை நட்சத்திரமாக இருந்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் இவரை அதிகம் எல்லாரும் “பேபி ஷாலினி” என்று தான் அழைப்பார்கள். ஏனென்றால் நடிகை சாலினி அவர்கள் தன்னுடைய மூன்று வயதிலேயே சினிமா துறையில் நடிக்கத் தொடங்கி விட்டார். பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
shaliniக்கான பட முடிவுகள்

அதிலும் நடிகை ஷாலினி அவர்கள் மலையாள மொழியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். மேலும், இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பேபி ஷாலினி கதாநாயகியாக அறிமுகமானது காதலுக்கு மரியாதை படத்தின் மூலம் தான்.அதன் பின்னர் அஜித் , பிரசாந்த், மாதவன் ஆகிய மூன்று பேருக்கு மட்டும் தான் ஜோடியாக நடித்தார் ஷாலினி.

- Advertisement -

அஜித்தை திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவில் இருந்து முழுமாகையாக விலகிவிட்டார் ஷாலினி. இறுதியாக பிரசாந்துடன் 2001 ஆம் ஆண்டு ‘பிரியாத வரம் வேண்டும்’ படத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை ஷாலினி 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பட வைரலாக பரவி வருகிறது.

அதிலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகை ஷாலினியை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ஷாலினி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement