வைரலாகும் கில்லி பட நடிகையின் வசனம் – இவங்க நடிகை மட்டுமல்ல இத்தனை பாட்டையும் பாடியுள்ளார். அதுவும் இவங்க அம்மா இந்த நடிகை தான்.

0
2114
TkKala
- Advertisement -

பொதுவாகவே சோசியல் மீடியாவில் வடிவேலு, விவேக், சந்தானம் இவர்களுடைய காமெடி மீம்ஸ் மற்றும் படங்களின் வரிகள் வருவது வழக்கமான ஒன்று. அதில் சில நடிகர்கள் படத்தில் பேசிய வரிகள் மீம்ஸ்களாக இடம் பெறுவது அரிது என்றே சொல்லலாம். அந்த வகையில் சில தினங்களாக கில்லி பட நடிகையின் புகைப்படமும் வரியும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவில் நாம் காணும் பல முகங்களை வெறும் முகங்களாக மட்டுமே கடந்து விடுகிறோம். ஆனால், அந்த முகங்களின் சில அடையாளங்களை பெரும்பாலானோர் அறிந்திட முற்படுவதில்லை. தற்போது ‘கில்லி’ படத்தின் இந்த template இப்பொழுது வைரலாக இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த templateஇல் இருப்பவரைப் பற்றி பலருக்குத் தெரிந்திருக்கலாம். அதுபோல தெரியாதவர்களும் இருக்கத்தானே செய்வார்கள். அவர் தான் இவர் T.K.கலா. மேலும், அவர் வேறு யாரும் இல்லைங்க பழம்பெரும் நடிகை சண்முகசுந்தரியின் மகள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் சண்முகசுந்தரி. இவர் நடிகை மட்டுமில்லாமல் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்திருக்கிறார். இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உட்பட பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.

- Advertisement -

சண்முகசுந்தரி திரை பயணம்:

இவர் தன்னுடைய ஐந்து வயதிலிருந்தே நாடகங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின் 45 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார். அதோடு இவர் இதுவரை 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஏராளமான படங்களுக்கு டப்பிங் குரலும் கொடுத்திருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பிற்காக பல விருதுகள் கிடைத்திருக்கிறது. இன்னும் நியாபகம் வரும் மாதிரி சொல்லப்போனால் மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் ‘என் தாய் மீனாட்சி அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம்’ வாங்குவாரே வடிவேலு.

சண்முகசுந்தரி மகள் டி கே கலா:

அவர் தான் பழம்பெரும் நடிகை சண்முகசுந்தரி. இவருடைய மகள் தான் டி கே கலா. இவரும் ஒரு பின்னணி பாடகி பாடகி ஆவார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் கன்னடம், தெலுங்கு பல மொழிகளில் பாடி இருக்கிறார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் டப்பிங் குரலும் செய்திருக்கிறார். இவர் 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி படத்தில் முத்துப்பாண்டியன் தாயாக நடித்து முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்

-விளம்பரம்-

டி கே கலா திரை பயணம்:

அதை தொடர்ந்து கஸ்தூரிமான், வெயில், குருவி, பிரிவோம் சந்திப்போம், நீ உன்னை அறிந்தால், மகிழ்ச்சி, ஐ போன்ற பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இதற்கு முன்னாடி அகத்தியர் படத்தில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் ‘தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை’ பாடல் மூலம் இவரை அறிமுகம் செய்தது இயக்குநர் ஏ.பி.நாகராஜன். அதை தொடர்ந்து பல பாடல்கள் பாடி உள்ளார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் ‘போய் வா நதியலையே’ – பல்லாண்டு வாழ்க – KV.மகாதேவன் இசையில் ‘வாரேன் வழி் பார்த்திருப்பேனே’ – உழைக்கும் கரங்கள் – MS.விஸ்வநாதன் இசையில்.

வைரலாகும் டி கே கலா புகைப்படம்:

ஆனால், அதிகம் இவரது குரலைப் பயன்படுத்திக்கொண்டது ரஹ்மான் தான். எதுக்கு பொண்டாட்டி – கிழக்குச் சீமையிலே, ஆராரோ ஆரிரோ – கருத்தம்மா, ஆடிப்பாரு மங்காத்தா- மே மாதம், செங்காற்றே – தாஜ்மஹால், குளிச்சா குத்தாலம் – டூயட் போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார். இது போக இந்தி, தெலுங்கிலும் பாடியிருக்கிறார். இந்நிலையில் இவருடைய புகைப்படம் தான் சில தினங்களாகவே சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கில்லி படத்தில் அவர் பேசி இருந்த வசனத்தையும், அவருடைய புகைப்படத்தையும் பதிவிட்டு ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement