எல்லாமே பக்கா பிளான் – ரஞ்சனாவை வெளுத்து வாங்கிய டாக்டர் ஷர்மிளா

0
462
- Advertisement -

ரஞ்சனா நாச்சியார் மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக நடிகை ஷர்மிளா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் புட்போர்ட் அடிப்பது வழக்கமான ஒன்று. அவர்கள் தங்களை ரூட்டுத்தல என்று நினைத்துக் கொண்டு படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கிறார்கள். இது அதிகம் சென்னை பகுதியில் தான் நடக்கிறது. குறிப்பாக, அரசு பேருந்துகளில் தான் இந்த மாதிரி நிறைய சம்பவம் நடக்கிறது.

-விளம்பரம்-

இதனால் நிறைய விபத்துகளும் ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சென்னையில் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிய படியே பயணம் செய்து இருந்தார்கள். அப்போது சின்னத்திரை நடிகை ரஞ்சனா பேருந்தை மறித்து டிரைவரை சராமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பேருந்தில் தொங்கிய மாணவரின் கன்னத்தில் அறைந்து படிக்கட்டில் தொங்க கூடாது என்று அந்த மாணவனை வெளுத்து வாங்கி அறிவுரை சொல்லி இருக்கிறார். இப்படி நடிகை ரஞ்சனா செய்த செயல் தான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ரஞ்சனா கைது:

இதை பார்த்த பலருமே அவரை பாராட்டி வருகிறார்கள். ஆனால், வழக்கம்போல் சிலர் இவருக்கு யார் இந்த உரிமையை கொடுத்தது? எப்படி அந்த மாணவனை அடிக்கலாம்? என்று சர்ச்சைகளையும் கிளப்பி இருக்கிறார்கள். அதோடு மாணவரை தாக்கியது, ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் ரஞ்சனா நாச்சியாரை போலீஸ் கைது செய்து இருக்கிறது. இதனை அடுத்து நிபந்தனையின் அடிப்படையில் ரஞ்சனா நாச்சியாருக்கு ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது.

ஷர்மிளா பேட்டி:

அது மட்டும் இல்லாமல் இவர் காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை போடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகையும், மருத்துவரான ஷர்மிளா கூறியிருப்பது,
மாணவர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் ஏன் ரஞ்சனா கேமரா உடன் செல்ல வேண்டும்? அதை வீடியோ எடுத்து ஏன் பிரபலமாக வேண்டும்? தற்போது கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு ரஞ்சனா பேசியிருப்பதாக கூறுகிறார்கள். அதேபோல் நானும் மணிப்பூர் சம்பவத்தில் உணர்ச்சிவசப்பட்டு பிரதமர் மோடியை பேசினால் ஏற்றுக் கொள்வீர்களா? சட்டத்துக்கு விரோதமான செயல்களை நியாயப்படுத்தவே பாஜக முயல்கிறது.

-விளம்பரம்-

ரஞ்சனா செயல் குறித்து சொன்னது:

சட்டத்துக்கு விரோதமாக கொடி கம்ப ம் நடுகிறார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்க வைத்தால் மாநில தலைவர் பத்து நாட்களில் 5000 கொடிக்கம்பம் நடுவோம் என்று சவால் விடுகிறார். சட்டமன்ற உறுப்பினர்களை அறிவில்லை என்று அநாகரிகமாக பேசுகிறார். அவர்களுக்கு என்று வந்தால் எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்துகிறார்கள். ரஞ்சனா நாச்சியார் கண்டபடி அந்த மாணவர்களை அடிக்கிறார். அந்த மாணவர்களுக்கு ஏதாவது நடந்து இறந்து விட்டால் ரஞ்சனா என்ன பதில் சொல்வார்? அக்கறையில் செய்கிறேன் என்ற பெயரில் எதற்கு மாணவர்களை தாக்க வேண்டும்.

பிஜேபி குறித்து சொன்னது:

அரசு பேருந்தில் ஏழை, எளிய மாணவர்கள்தான் செல்வார்கள். அவர்களை அடித்தால் கேட்க யாரும் வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் இப்படி நடந்திருக்கிறார். திமுக அரசின் மீது எதிர்மறையாக தாக்கவே இது போன்ற செயல்களில் ரஞ்சனா ஈடுபட்டிருக்கிறார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்ற பிம்பத்தையே பாஜக செய்கிறது. பாஜகவினர் அடித்தட்ட மட்டத்திலிருந்து அரசியல் தலைவர்களின் மனைவி வரை அனைத்து பெண்களையும் இழிவுபடுத்தி தான் வருகிறது. இந்த சூழல் இன்னும் தீவிரம் அடையும். 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தேர்தலை ஒட்டி பிளான் செய்து இது போன்ற சம்பவங்களை நடத்தி வருகிறார்கள். வட மாநிலங்களில் செய்யும் தேர்தல் ஸ்டேடர்ஜியை தமிழகத்திலும் செய்கிறார்கள் என்று என்று கடுமையாக பேசியிருக்கிறார்.

Advertisement