வெற்றிமாறன் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு களத்தில் திரௌபதி ஷீலா. காரணம் இது தானாம். வைரல் புகைப்படங்கள்.

0
559
SHeela
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் சீலா ராஜ்குமார். இவர் நடிகை மட்டுமில்லாமல் பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். இவர் முதன் முதலாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ஆறாது சினம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து அசுரவதம், நம்ம வீட்டுபிள்ளை போன்ற சில படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார். பின் இவர் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த அழகிய தமிழ் மகள் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார். சொல்லப்போனால் இந்த சீரியல் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

-விளம்பரம்-

அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் படவாய்ப்புகள் கிடைத்தது. இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளிவந்த திரௌபதி படத்தில் சீலா நடித்து இருந்தார். திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது. இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது. இருப்பினும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தில் ஹீரோவாக ரீச்சர்ட் நடித்து இருந்தார்.

- Advertisement -

திரௌபதி திரைப்படம்:

இந்த படம் பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியும், சமூகத்தில் நிலவும் ஜாதி கொடுமைகளையும், சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து உருவான படம். இதனை தொடர்ந்து ஷீலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்த மண்டேலா படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிப்பு வேற லெவல். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

ஷீலா நடித்த படங்கள்:

விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக இந்த படம் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருந்தது. பின் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் . ஆஸ்கருக்கு பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாடி வாசலில் நடந்த ஜல்லிக்கட்டில் சீலா பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

ஷீலா நடிக்கும் வெப்சீரிஸ்:

இது குறித்து பலரும் இவர் என்ன ஜல்லிக்கட்டில் கலந்து இருக்கிறாரா? என்ன? எதற்கு? என்று கேள்வி எழுப்பினார்கள். இந்நிலையில் இதற்கு விளக்கம் தரும் வகையில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஷீலா அவர்கள் தற்போது ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வரும் தமிழ் வெப்சீரிஸ்ஸில் நடித்து வருகிறார். விருமாண்டியில் வரும் அன்னலட்சுமியை போன்ற வேடமாம் இதில் இவருக்கு. இதை இயக்குனர் வெற்றிமாறன் மேற்பார்வையில் இயக்குனர் ராஜ்குமார் இயக்குகிறார். இந்த வெப்சீரிஸ் பெயர் ‘ஆஹா தமிழ். மேலும், இது முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் வெப்சீரிஸ்.

ஷீலா கலந்த ஜல்லிக்கட்டு:

இதற்காக படக்குழு இவர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் சென்று படப்பிடிப்பை நடத்தி வருகிறது. அந்த வகையில் திருச்சியில் உள்ள நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் படத்தின் நாயகி ஷீலா கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இது வெப்சீரிஸ் ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. மேலும், இது குறித்த தகவல்கள் கூடிய விரைவில் வெளிவரும். ஷீலாவின் ஜல்லிக்கட்டு படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement