3 வயதில் பிரிந்து சென்ற தந்தை இறந்தது தெரியாமல், ஒரு வாரம் கழித்து ஷெரின் போட்ட உருக்கமான பதிவு

0
403
- Advertisement -

பிக் பாஸ் நடிகை ஷெரின் தந்தை இறந்திருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் செரின் ஷிரிங்கார். செரின் கர்நாடகத்தை சார்ந்தவர். இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை பெங்களூரில் படித்துவிட்டு , கல்லூரி படிப்பை பால்ட்வின் மகளிர் மெதடிஸ்ட் கல்லூரியில் படித்தார். ஆனால், இவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வடிவழகி ஆக பணிபுரிய தொடங்கினார்.

-விளம்பரம்-

இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய பல மொழிகளில் படங்களை நடித்து இருக்கிறார். இவர் தன்னுடைய 16 வயதில் ‘தர்ஷன்’ என்ற படத்தின் மூலமா தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். பின் இவர் தமிழில் துள்ளுவதோ இளமை, ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், உற்சாகம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பிறகு இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

ஷெரின் திரைப்பயணம்:

இதனால் ஷெரின் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். அதற்குப் பிறகு சில ஆண்டுகள் இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி இருந்த நண்பேன்டா என்ற படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்து இருந்தார். ஆனால், அதில் அவர் கொஞ்சம் உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்தார். அதற்கு பிறகும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இவர் 2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார்.

ஷெரின் கம்பேக்:

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் உடல் எடையை குறைத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய சமையல் தலைமையும் வெளிப்படுத்தி இருந்தார். மேலும், இவர் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது இவர் ரஜினி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஷெரின் தந்தை இறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

ஷெரின் தந்தை இறப்பு:

ஷெரின் தந்தை இறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இது தொடர்பாக ஷெரின் பதிவில், நான் உங்களை ரொம்ப நேசித்தேன். உங்களுடைய அன்பிற்காக நான் வாழ்நாள் முழுவதுமே ஏங்கினேன். நீங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்து விட்டீர்கள். ஆனால், இன்று தான் எனக்கு தகவல் கிடைத்தது. அதைக் கேட்டு நான் ரொம்பவே மனம் உடைந்து விட்டேன். உங்களுடைய இந்த படம் தான் என்னிடம் இருக்கிறது. இது என்னிடம் எப்போதுமே இருக்கும். மிஸ் யூ! என்று பதிவிட்டிருக்கிறார்.

ஷெரின் வாழ்க்கை:

மேலும், செரின் ஷிரிங்கார் வாழ்வில் மிகப்பெரிய அளவில் யாருக்கும் நடக்காத கொடுமையான சம்பவங்களும் நடந்து இருக்கிறது. செரின் அப்பா மூன்று வயதிலேயே அவரை விட்டுட்டு போய் விட்டார். அது ஏன் என்று தெரியவில்லை. சிறுவயதிலேயே ஷெரினை விட்டு அவர் அப்பா பிரிந்து விட்டாலும் அவர் அம்மா தான் அவரை வளர்த்தார். இருந்தாலும்,அவருக்கு தன் அப்பா மீது அதிகம் பாசம் வைத்து இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரின் அவருடைய அம்மாவை கட்டிப்பிடித்து, அப்பாவை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. சேரன் சாரை பார்த்தால் எனக்கு அப்பா உணர்வு வருகிறது என்று ரொம்ப எமோஷனலாக பேசியிருந்தார்.

Advertisement