நாங்கள் பிரிந்து விட்டோம் என்று ஷில்பா ஷெட்டியின் கணவர் பதிவிட்டு இருக்கும் அறிவிப்பு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷில்பா செட்டி. இவர் தன்னுடைய பதினாறு வயதில் இருந்தே மாடலிங் மூலமாக தனது கேரியரை தொடங்கினார். அதன் பின் இவர் பாஜிகர் என்ற படம் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அப்படியே இவர் இந்தியில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
மேலும், தமிழில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் ரோமியோ’ என்ற படத்தில் பிரபு தேவா உடன் இணைந்து ஷில்பா நடித்து இருக்கிறார். இந்த படத்தின் மூலம் ஷில்பா தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் குஷி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியும் இருந்தார். இதைத்தொடர்ந்து சில்பா செட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்தார்.
ஷில்பா ஷெட்டியின் திரைப்பயணம்:
இவர் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். அதோடு இவருக்கு என்று இந்தியா முழுவதும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 வில் சில்பா செட்டி பங்கு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இவர் 2009ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சில்பா செட்டியால் இரண்டாம் குழந்தை பெற்று எடுக்க முடியாத காரணத்தினால் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்.
ஷில்பா குறித்த தகவல்:
இது குறித்து அப்போது ஷில்பாவை பலரும் விமர்சித்து இருந்தார்கள். தற்போது இவர் படங்களில் நடித்தும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் யோகா தொடர்பான விழிப்புணர்வையும் சில்பா செட்டி நடத்தி இருக்கிறார். மேலும், இவர் ஐபிஎல் உரிமையாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது மட்டுமில்லாமல் இவர் பல பிசினஸ்கள் செய்து வருகிறார். இந்த நிலையில் ஷில்பா கணவர் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் இணையத்தில் சர்ச்சை கிளப்பி இருக்கிறது.
ராஜ் குந்த்ரா குறித்த தகவல்:
ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ‘JL Media’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை நிறுவி அதில் வெப் சீரீஸ் என்ற நிறுவி ஆபாச வீடியோகளை பதிவிட்டு வந்து இருந்தார். இதை தொடர்ந்து இவரை போலீசார் 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். இரண்டு மாதங்கள் இவர் சிறையில் இருந்தார். அதற்கு பின் ஜாமீனில் ராஜ் குந்த்ரா விடுவிக்கப்பட்டு வந்தார். அதற்குப் பிறகு ராஜ் குந்த்ரா சோசியல் மீடியா பக்கமே தலை காட்டாமல் இருந்தார். பின் இவர் நடிகை உர்ஃபி ஜாவேத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
We have separated and kindly request you to give us time during this difficult period 🙏💔
— Raj Kundra (@onlyrajkundra) October 19, 2023
ராஜ் குந்த்ரா பதிவு:
‘UT 69’ என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. சிறையில் இருந்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து இந்த படம் எடுத்ததாக ராஜ் குந்த்ரா தெரிவித்து இருந்தார். மேலும், இந்த படத்திற்கான கதை மற்றும் தயாரிப்பு இரண்டையும் ராஜ் குந்த்ரா செய்திருக்கிறார். ஆனால், இந்த படத்தினுடைய இயக்குனர் யார் என்று தான் தெரியவில்லை. இந்த நிலையில் இன்று ராஜ் குந்த்ரா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில், நாங்கள் பிரிந்து விட்டோம். இந்த கடினமான காலகட்டத்தில் இருந்து வெளிவர கால அவகாசம் கொடுங்கள் என்று கூறி இருக்கிறார்.
ஆனால், இவர் யாரை பிரிந்தார் என்ற தகவல் தான் இன்னும் தெரியவில்லை. ஒருவேளை இவர் தன்னுடைய மனைவி ஷில்பா ஷெட்டையை பிரிந்தாரா? புதிய படத்திற்கு இதுபோன்ற விளம்பரம் செய்கிறாரா? என்று தெரியவில்லை.