ஆபாச படம் எடுத்ததால் கைதான ஷில்பா ஷெட்டியின் கணவர் – பாலிவுட்டை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள். வைரலாகும் அவரின் பழைய வக்கிர பதிவுகள்.

0
3038
shilpa
- Advertisement -

பெண்களை ஏமாற்றி ஆபாசம் படம் எடுத்த அதன் மூலம் சம்பாதித்து வந்த பிரபல பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாலிவுட் உலகையே பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கி இருக்கிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷில்பா செட்டி. இவர் இந்தியில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் பிரபு தேவா உடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஷில்பா செட்டி பரிச்சயமானார்.

-விளம்பரம்-
Image

அதோடு தளபதி விஜய் உடன் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் மோதி விளையாடு படத்திலும் ஷில்பா செட்டி நடித்திருந்தார். இவர் 2009ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2012ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. பின்னர் இரண்டாம் குழந்தையை வாடை தாய் மூலம் பெற்றார் ஷில்பா ஷெட்டி.

இதையும் பாருங்க : கர்ப்பமாக இருக்கும் ரஜினியின் மகள் – மீண்டும் தாத்தாவாக போகும் குஷியில் சூப்பர் ஸ்டார்.

- Advertisement -

இந்த நிலையில் பெண்களை ஏமாற்றி ஆபாச படங்களைத் தயாரித்து அதை செயலியில் வெளியிட்டு பணம் சம்பாதித்தாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷில்பா ஷெட்டி கணவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். ராஜ் குந்த்ரா ‘JL Media’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை நிறுவி அதில் வெப் சீரீஸ்களை தயாரித்து வழங்கி வருகிறார். மும்பையில் கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

அதே போல இந்திய கிரிக்கெட் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒரு பங்குதாரராகவும் இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்ததாக நேற்று இரவு மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ஆபாசப் படங்களை உருவாக்கி அதனை மொபைல் அப்ளிகேஷனில் வெளியிடுகின்றனர் என்று கடந்த பிப்ரவரி மாதம் புகார் வந்தது.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போது இந்த விவகாரத்தில் முக்கிய நபராக ராஜ் குந்த்ரா இருப்பது தெரிய வந்தது. மேலும், அவர் ஆபாசப் பட உருவாக்கத்திலும், அதனை மொபைல் அப்ளிகேஷனில் வெளியிட்டதற்க்கான ஆதாரங்களையும் திரட்டி இருந்தோம். இதற்கு பின்னர் தான் அவரை கைது செய்தோம் என்று கூறியுள்ளனர். ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பலரும் ட்விட்டரில் பாலிவுடை புறக்கணிக்க வேண்டும் என்று ஹேஸ் டேக்கை போட்டு வருகின்றனர்.

அதே போல ராஜ் குந்த்ராவின் பழைய வக்கிரமான பதிவுகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பதிவில், சன்னி லியோன் கரோர்பதி நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார் அப்போது அமிதாப் பச்சன், இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பிடித்தது என்ன என்று கேட்டிருந்தார் ? அதற்கு சன்னி லியோன் வேகமாக செயல்படும் விரல்களுக்கு தான் முதல் இடம் என்று கூறி இருந்ததாக மிகவும் வக்கிரமாக பதிவிட்டுள்ளார்.

Advertisement