சமீப காலமாகவே சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகின்றனர். அதிலும் சமீப காலமாக சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகைகள் ஏராளம். அந்த வகையில் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா, ஷிவானி என்று பலர் சமூக வலைதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகின்றனர்.
தற்போது 19 வயதான இவர் தனது 14 வயதிலேயே மாடலிங்கில் ஈடுபட்டுவந்தார். மேலும் 14 வயதிலேயே பல்வேறு விளம்பரங்களில் நடித்த சிவானி. விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 3 தொடரின் மூலம் தான் டிவி சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் தான்.
பகல் நிலவு சீரியளுக்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து வந்த சிவானி தற்போது எந்த சீரியலிலும் காணமுடியவில்லை. இருப்பினும் அம்மனின் சமூகவலைதளத்தில் சமீபகாலமாக பெரும் வைரல் ஆகி இருக்கிறார். அதற்கு காரணம் இவர் நடத்திவரும் போட்டோஷூட் தான். கடந்த சில காலமாக நடிகை ஷிவானி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதிலும் பகல் நிலவு சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த ஷிவானி சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அதிலும் 4 மணி 5 மணி என்று தினமும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். இதனாலேயே இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் ஒரு கிளாமரான போஸை கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர், என்னமா வீட்ல புதுசா வாங்கி கொடுத்துட்டாங்களா என்று கேலி செய்து உள்ளார்.