14 வயதில் அந்த சமயத்தில் ஏற்பட்ட மாதவிடாய். அதனால் தான் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனது. முகம் சுளிக்காமல் சொன்ன நேர்கொண்ட பார்வை நடிகை.

0
8162
shradha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த இவன் தந்திரம் என்ற படத்தின் மூலம் தான் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா, காற்றுவெளியிடை போன்ற பல படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு தல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்த படம் இவரை சினிமா துறையில் தூக்கிவிட்டது.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் கன்னடம், தமிழ், மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் அவர்கள் தன்னுடைய 14 வயதில் நிகழ்ந்த அனுபவத்தை சமீபத்தில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, எனக்கு 14 வயது இருக்கும். எங்கள் வீட்டில் ஒரு பூஜை நடந்தது. அதில் நாங்கள் எல்லோரும் கலந்து கொண்டோம்.

- Advertisement -

அப்போது எனக்கு திடீரென்று மாத விடாய் வந்தது. அப்போது நான் அருகில் இருக்கும் என்னுடைய ஆன்ட்டியிடம் அது பற்றி கூறினேன். அம்மா வரவில்லை. நான் அதிக கவலையில் இருந்தேன். என் பக்கத்தில் இருந்த ஒரு பெண் நான் வருத்தமாக இருப்பதை பார்த்தார். நான் பேசியதையும் எல்லாம் அவர் ஒட்டு கேட்டு விட்டு என்னிடம் பேசினார். பின் அவர் பரவாயில்லை குழந்தை கடவுள் உன்னை மன்னித்து விடுவார்.

மாதவிடாய் நேரத்தில் பூஜையில் கலந்துகொண்டதால் தான் இப்படி நடந்தது என்று சொன்னார். அந்த நாள் தான் நான் பெண்ணாக மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக மாறினேன் என்று கூறியுள்ளார். தற்போது இவர் தமிழ் சினிமாவில் மாறா மற்றும் சக்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சக்ரா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement