குழந்தை பிறந்ததை சொன்ன போது அம்மா எதார்த்தமாக சொன்னதை மகளின் பெயராக வைத்துள்ள ஷ்ரேயா.

0
2143
shreya
- Advertisement -

நடிகை ஸ்ரேயா தன் மகளுக்கு ‘ராதா’ என்று பெயர் வைத்ததற்கான காரணத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வியந்து போய் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் நடிகை ஸ்ரேயா அவர்கள் ரஷ்ய விளையாட்டு வீரர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. திருமணத்திற்கு பிறகு இவர் தன் கணவருடன் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்.

இதையும் பாருங்க : ஐக்கி பேர்ரியா இது ? முடியை கலர் செய்வதற்க்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க (இதுலயே நல்லா இருக்காங்க)

- Advertisement -

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு பெண் குழந்தை பிறந்து இருப்பதையும், 9 மாத குழந்தைக்கு தான் தாயாக இருக்கிறேன் என்றும் நடிகை ஸ்ரேயா அவர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் நடிகை ஸ்ரேயாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஸ்ரேயா அவர்கள் தன் மகள் குறித்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியது, என்னுடைய மகளுக்கு ராதா என பெயர் வைத்திருக்கிறேன். முதலில் என் மகள் பிறந்த விஷயத்தை நான் என்னுடைய அம்மாவிடம் சொன்னேன். அவர் ‘ஓ ராதா ராணி வருகிறாள்’ என்று சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்.

இதைப்பார்த்த என் கணவர் ஏன் உன் அம்மா ரஷ்ய மொழியில் குழந்தையை கொஞ்சுகிறார் என்று கேட்டார். அதற்கான காரணம் என்னவென்றால், ராதா என்றால் ரஷ்ய மொழியில் மகிழ்ச்சி என்று அர்த்தம். சமஸ்கிருதத்திலும் ராதா என்றால் மகிழ்ச்சி என்ற பொருள். இதை தெரிந்தவுடன் நான் என் குழந்தைக்கு ராதா என்றே பெயர் வைத்து விட்டேன். இதனால் என்னுடைய கணவர் ரொம்ப சந்தோஷப்பட்டார். பின்பு குழந்தை சுமந்தவள் நீ அதனால் உன்னுடைய பெயரும் இருக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். பின் நாங்கள் குழந்தைக்கு “ராதா சரண் கோஸ்சீவ்“ என்று முழுமையாக பெயர் வைத்தோம் என்று கூறி இருந்தார். இதை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் ஸ்ரேயாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement