திருப்பதி கோவில் முன் முத்தம் கொடுத்து கொண்ட ஷ்ரேயா தம்பதி. வலுக்கும் கண்டனங்கள்.

0
1882
shriya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா. 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பின் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், நடிகை ஸ்ரேயா அவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் கதாநாயகியாக வலம் வந்தவர். மேலும், நடிகை ஸ்ரேயா அவர்களுக்கு சினிமாவில் பட வாய்ப்பு குறைய தொடங்கியதால் 2018 ஆம் ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்ஸிப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று எடுத்துக் கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்கள்.

இதையும் பாருங்க : 12 ஆண்டுகளுக்கு பின் அஜித்தை பைக் ஷோவில் சந்தித்துள்ள ஏகன் பட நடிகர் – எப்படி ஆகிட்டார்பாருங்க .

- Advertisement -

இந்நிலையில் நடிகை ஸ்ரேயா அவர்கள் தன் கணவருடன் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்தபோது எடுத்த புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஸ்ரேயா அவர்கள் தன் கணவருடன் இன்று காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது அவர் கோவில் வாசலில் முகத்தை அணியாமல் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஸ்ரேயாவின் கணவர் ஸ்ரேயாவுக்கு கோவில் வாசலில் நின்று முத்தமிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோவிலுக்கு சாமி கும்பிட வரும் போது இந்த மாதிரியெல்லாம் புகைப்படம் எடுத்துக் கொள்வது அவசியமான ஒன்றா? என்று சிலர் விமர்சித்தும் வருகிறார்கள். தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் RRR உள்பட ஒரு சில படங்களில் ஷ்ரேயா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement