12 ஆண்டுகளுக்கு பின் அஜித்தை பைக் ஷோவில் சந்தித்துள்ள ஏகன் பட நடிகர் – எப்படி ஆகிட்டார்பாருங்க .

0
900
navdeep
- Advertisement -

அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் தல அஜித். உலகம் முழுவதும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தல அவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்தியாவில் நிறைவடைந்த நிலையில் வெளிநாட்டில் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து இருப்பதால் படப்பிடிப்புக்கு வெளிநாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வலிமை படத்தின் சில சண்டைக் காட்சிகள் ரஷ்யாவில் எடுக்கப்பட்டது.

இதையும் பாருங்க : 3 மாசமா எனக்கு இந்த பிரச்சனை இருந்துச்சி – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய காரணம் குறித்து தீபிகா.

- Advertisement -

ரஷ்யாவில் தன்னுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்த அஜித் ரஷ்யாவில் பைக்கில் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் தல அஜித்தின் ஏதாவது ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் கிடைக்காதா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அஜித்துடன் நவ்தீப் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியா திரும்பிய அஜீத் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு பைக் ரேஸ் நிகழ்வில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்வில் நடிகர் நவ்தீப்பும் கலந்துகொண்டார். ஏகன் படத்தில் அஜித் உடன் நவ்தீப் இணைந்து நடித்து உள்ளார். இந்த படம் வெளியாகி 12 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் நேற்று அஜித்துடன் சேர்ந்து நவ்தீப் ஒரு புகைப்படத்தை எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

பின் ட்விட்டரில் நவ்தீப் கூறியது, அஜித் அன்பான மனிதர். அவர் ஹாய் சொன்ன விதமே நாங்கள் சந்தித்து நீண்ட நாட்களான உணர்வை ஏற்படுத்தியது. அவர் மிகவும் எளிமையானவர். உண்மையிலேயே அஜித் மாதிரி ஒரு அற்புதமான மனிதர் எவரும் கிடையாது என்று கூறியிருந்தார். தற்போது நவ்தீப் போட்டிருந்த ட்விட் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement