திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா.

0
38698
Shreya-saran
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். மாடல் அழகியான இவர் ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் அதன் பின்னர் தமிழில் வெளியான உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார் ஸ்ரேயா. நடிகை ஸ்ரேயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். தொடர்ந்து படங்களில் நடித்து ஸ்ரேயா இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Love you forever and ever @andreikoscheev

A post shared by Shriya Saran (@shriya_saran1109) on

அதன் பின்னர் வடிவேலு கதாநாயகனாக நடித்த இந்திர லோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் ஒரே ஒரு குத்து பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்த பாடலுக்கு பின்னர் தான் ஸ்ரேயாவிற்கு முற்றிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இருப்பினும் தெலுங்கு படங்களில் அவ்வப்போது தலை காண்பித்து வந்தார் . ஆனால் சில வருடங்களாக இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தெரியாமல் இருந்தது. திடீரென்று ரஸ்யாவை சேர்ந்த தனது காதலர் (Andrei Koscheev)ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை போட்டு ஒரு வழியாக விஷ்ணு விஷாலுடன் காதலை உறுதி செய்த வீராங்கனை.

இவர்கள் திருமணம் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இவர்கள் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமணம் காதல் திருமணம் என்பதும் குறிபிடத்தக்கது. தனது 35 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகை ஸ்ரேயா, திருமணத்திற்கு பின்னர் தனது காதல் கணவருடன் ரஷ்யாவில் செட்டில் ஆகிவிட்டார். இதனால் நடிகை ஷ்ரேயா தொடர்ந்து நடிப்பாரா மாட்டாரா என்று ரசிகர்கள் சந்தேகித்து வந்தனர்.

-விளம்பரம்-

ஆனால், தற்போது தெலுங்கில் இரண்டு படத்திலும், தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா அடிக்கடி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இப்போது திருமணம் முடிந்து 2 வருடங்கள் கழித்து தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்திலேயே ஆயிர கணக்கில் லைக்ஸ்களை குவித்துள்ளது.

Advertisement