நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை போட்டு ஒரு வழியாக விஷ்ணு விஷாலுடன் காதலை உறுதி செய்த வீராங்கனை.

0
14635
Vishnu
- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ஜீவா, வெண்ணிலா கபடிக் குழு, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை எனப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வருகிறார் விஷ்ணு விஷால் .

-விளம்பரம்-

இதற்கிடையே, விஷ்ணு விஷால், ரஜினி நடராஜ் என்பவரைக் கடந்த 2011-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான மகனும் பிறந்தார். திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன நிலையில் தற்போது மனைவி ரஜினியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிட்டதாக நடிகர் விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்திருந்தார். இருப்பினும் தனது மனைவியிடம் இருக்கும் மகனை மட்டும் கவனித்து வருகிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : நான் அத பண்ணிட்டு கஷ்டபட்ர,நீ பண்ணாதடா. இளம் நடிகருக்கு அட்வைஸ் செய்துள்ள விஜய் சேதுபதி

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஷ்ணு விஷால், ஒரு ஓண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட பலரும் அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினர். பின்னர் தான் தெரிந்தது அந்த பெண் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா என்பது. கடந்த சில காலமாகவே ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளனர் என கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில் அதை உறுதி செய்யும் விதத்தில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ஜுவாலா கட்டா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். My valentine ❤️ என விஷால் கன்னத்தில் முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனை விஷ்ணு விஷாலும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் விஷ்னு விஷால், ஜுவாலா கட்டாவை காதலிக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement